கட
தஞ்சைவாணன் கோவை
122

 
     தோடு - பனைமேலேற்றுங்கால்     ஏடு;    பெண்   மேலேற்றுங்   கால்
செவியிற்குழை. குரும்பைக் கொங்கை; பனைக்குப் பண்புத் தொகை;  பெண்ணுக்கு உவமைத்தொகை. `உண்கட்`பனைக்கு உண்ணுங்கள்; பெண்ணுக்கு மையுண்ட கண். ஒலிடுதல் - ஆரவாரித்தல். `வளநகர்க்கே` என்புழி வேற்றுமை மயக்கம்.

தலைமகன் கூற்றாயின வெல்லாம், `மடற்வற்`றிற்கும், பாங்கி கூற்றாயினவெல்லாம்,
`மடல்விலக்`கிற்கும் உரித்தாயினவாறு காண்க.
(107)    
தலைவி யிளைமைத்தன்மை பாங்கி தலைவர்க்குணர்த்தல்:
களவரும் பாகரு நிலங்கள் காமக் கடவுளுமால்
கொளவரும் பாபைங் குரும்பைக் குலுஞ்செங் குமுதத்துவெண்
தனவரும் பாநண்ப னேதஞ்சை வாணன் தமிழ்வை யைநாட்
டிளவரும் பாமிவள் மாட்டேன்கொ லோநின் றிரப்பதுவே.

     (இ-ள்.) நண்பனே!  கருநீலம்  போன்ற  கண்களிற் களவு அரும்பவில்லை;
காமக் கடவுளும் காதல்கொள்ள மார்பில் பசிய குரும்பைக் குலைபோல முலைகள்
அரும்பவில்லை; செவ்விய குமுதம் போன்ற வாயில்  வெண்டளவு
 போன்ற  பல்
அரும்பவில்லை;  தஞ்சைவாணன்  தமிழ்  வையை நாட்டின்  அரும்பு  போன்ற
இவளிடத்தில் யான் சென்று நின்று இரப்பது எவ்வாறு சொல்வாயாக என்றவாறு.

     பொருளை உவமைப்பொருளாய்க் கூறியவெல்லாம் ஆகுபெயர்.  கொல்லும்,
ஓவும் அசைநிலை.
(108)    
  தலைவன் தலைவி வருத்தியவண்ண முரைத்தல்:
சிலைபயில் வாணுதல் மின்னே பிறந்தவச் செவ்வியிலே
கொலைபயி னாகக் குருளையைப் போற்குறி யோளிருந்த
மலைபயில் வார்தமிழ் வாணன்தென் மாறை மயிலனையாள்
அலைபயி லால்விழி யாலென தாவி யணங்கினளே.

      (இ-ள்.) சிலை வளைவு பழகும் வாணுத்லையுடைய மின்னே! குறுமுனிவன்
இருந்த   மலையில்  பழகிய   நெடுந்தமிழ்கற்ற  வாணன்  தென்மாறை   நாட்டு
மயிலனையாள் பிறந்த அக்காலத்தே  கொலைபழகிய  நாகக்  குட்டியைப்  போல்
அலையிற்  பழகிய ஆலம்  போன்ற  விழியால்  எனது  ஆவியை  வருத்தினாள்
என்றவாறு.

      சிலை - வில்.      பயிலல் - நான்கும் பழகுதல்.      குருளை - குட்டி.
குறியோன் - அகத்தியன்.      `வாணுதல் மின்னே`      என்றது சிறப்புருவகம்.
அலை : ஆகுபெயர்.   ஆல் என விகாரப்பட்டது;     நீலம் - நீலம்      என
நின்றாற்போல.
(109)