|
|
என்னை மறைத்தபின் எளிதென நகுதல்: |
என்னை மறைத்தபின் எளிதென நகுதல் என்பது, நீர் இருவரும் ஒத்து என்னை மறைத்தபின் இக்களவொழுக்கம் ஒழுகுதற்கு எளிதென நகையாடிக் கூறல்.
|
| மண்ணும் பயில்வித்து மொன்றினுஞ் சந்திர வாணன்வெற்பா நண்ணும் புனலின்றி அங்குரி யாதுங்கள் நல்வினையாற் கண்ணுங் கருத்துங் கலந்தன வாயினுங் கண்ணினும்முன் எண்ணுங் குறையென்னை நீர்மறைத் தாலிங் கியல்வதன்றே.
|
(இ-ள்.) சந்திரவாணன் வெற்பனே! நிலனும் நிலத்துப் பழகிய வித்தும் இரண்டும் ஒத்துக் கூடினும், அவ்விரண்டும் நனையப்பொருந்தும் புனலின்றி முளையாதது போல, நீங்கள் முன்செய்த நல்வினையால் கண்ணும் கருத்தும் கலந்தன வாயினும், கருதுமிடத்து நும்முள்ளத்துள் எண்ணுகின்ற குறை நீர் என்னை மறைத்தால் இவ்விடத்து முடிவதன்று என்றவாறு. |
பயிலுதல் - பழகுதல். அங்குரியது - முளையாது. எண்ணல் - கருதல். இயலுதல் - பொருந்துதல்; பொருந்தல் எனவே முடிவின்மேல் நின்றது. இச்செய்யுளில் `அங்குரியாது` அது போல என்று சுட்டிக்கூறாத உவமமாயிற்று. என்னை, |
| 1`சுட்டிக் கூறா வுவம மாயிற் பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே`
|
என்னுஞ் சூத்திரவிதியால்,
|
| 2`மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து`
|
என்றாற்போலக் கொள்க. |
(112) |
அந்நகைபொறா தவன்புலம்பல்: |
அந் நகைபொறாது அவன் புலம்பல் என்பது, அவள் நகையாடிக் கூறுதல் பொறாமல், தலைவன் புலந்து கூறுதல்.
|
| வெவ்வே லெறிந்த விழுப்புண்ணின் மீட்டும் வெதுப்பியதோர் செவ்வேல் நுழைப்பவர் சீலமன் றோதிரு வேமருவார் வைவேல் அமர்வென்ற வாணன்தென் மாறை மயில்பொருட்டால் நைவேனை அஞ்சலென் னாதின்ன வாறு நகைக்கின்றதே.
|
|
1. தொல். பொருள். உவமவியல் - 7. |
2. குறள். விருந்தோம்பல் - 10. |