|
|
(இ-ள்.) திருவையொப்பவளே, மருவார் வைவேலாற் செய்யும் போரைவென்ற வாணன் தென்மாறைநாட்டு மயில்போன்றவள் பொருட்டால் நைகின்ற என்னை அஞ்சலை யென்றோதாது இவ்வாறு நகைக்கின்றது, வெவ்விய வேலெறிந்து துன்பந்தரும் புண்ணில் மீட்டும் அழலிற் பழுக்க வெதுப்பியதொரு வேலை நுழைப்பவர் குணமன்றோ என்றவாறு. |
வெவ்வேல் - கொடிய வேல். விழுப்புண் - துன்பந்தரும் புண். வெதுப்பல் - அழகிடை வெதுப்பல். செவ்வேல் - பழுக்கக் காய்ந்த வேல். சீலம் - குணம். திரு: ஆகுபெயர். வை - கூர்மை. அமர் - போர். மயில்: ஆகுபெயர். ஆதலால், நகைக்கின்ற நின் குணமும், வேலை நுழைப்பவர்தங் குணமும் ஒக்கும் என்பதாயிற்று. |
(113) |
பாங்கி தலைவனைத் தேற்றல்: |
| தன்கண் ணனையதன் பாங்கிய ருள்ளுந் தனக்குயிராம் என்கண் ணருள்பெரி தெம்பெரு மாட்டிக் கிகல்மலைந்தார் வன்கண் ணமர்வென்ற வாணன்தென் மாறையில் வந்தவளால் புன்கண் ணடையலை நீயினி வாடல் புரவலனே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் மலையிலிருக்கும் அணங்கே! அந்தப் பைந்ததொடியை யுடையாளது ஆகத்தைக் கூடாவிடில் யான் சொல்லி யென்ன பயன்? வெண்மை நிறம் பொருந்திய திரை பொருந்தும் தென்கடலிடைப் பிறந்த முத்தும், பொதியமலையிற் பிறந்த சந்தனமும் செழும்பனிநீர் விட்டரைத்து வேட்கைத்தீயில் வெதும்பிய எலும்பு உருக என் மேனியெங்கும் அப்பினாலும் வெப்பம் ஆறாது; இன்று எனது காரியமெல்லாம் நினது எண்ணத்தின் மட்டிற்பட்டது என்றவாறு. |
(இ-ள்.) புரவலனே! எம்பெருமாட்டிக்குத் தன் கண் போன்றுள்ள பாங்கியர் பலருளர், அப்பலருள்ளுந் தனக்கு உயிரொக்கும் என்னிடத்து அருள்பெரிது; பகையா யெதிர்ந்தார் கொடிய அமரை வென்ற வாணன் தென்மாறையில் வந்து அவளால்வருத்தமடையலையாய் இன்று வாடற்க என்றவாறு. |
எனவே, பாங்கியர் பலருங் கண்போன்றவர் என்றும், தான் உயிர் போன்றவள், தன்னிடத்து அருள்பெரிதென்றும் கூறிய வதனால், தன் சொல்மறாள், நீ யஞ்சாதே யென்று தேற்றிய வாறாயிற்று. உயிராம் - உயிரொக்கும். இகல் - பகை. வன்கண் அமர் - கொடிய அமர். புன்கண் - வருத்தம். வாடல்: அல்லீற்று வியங்கோள். |
(114) |
பாங்கி கையுறை யேற்றல்: |
| ஒலிதெண் கடல்புடை சூழுல கேழினு மூழ்வினைதான் வலிதென்பதனை வயக்கிய தாற்றஞ்சை வாணனவெற்பா கலிதெங்கு மாவுங் கமுகும் பலாவுங் கதலிகளும் பொலிதன் பொதியிலின் மேற்சந்த னாடவிப் பூந்தழையே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பா! இலாங்கலி தென்னை மா பாக்கு பலா வாழை ஆகிய மரங்கள் பொலிந்த தெற்கின் கணுள்ள பொதியமலையிடத்து உண்டாகிய சந்தனக்காட்டிற் றோன்றிய
|