கட
தஞ்சைவாணன் கோவை
124

 
    இவ்வாறு  கூறாது  வாளாவிருக்கின் அமையாதோ வெனின்  வாளாவிருக்கின்
அவள்   கூறியதற்கு   உடம்பட்டாளாம்;   உடன்படின்  மேற்கூறுங்   கிளவிகள்
பலவற்றையும்  நீக்கல்  வேண்டுமாதலான்,  இவ்விடத்து  இம்மொழி  இவரிவர்க்கு
உரியவென்று அவ்விடத் தவரவர்க்கு உரைப்பதுபற்றி,

1`முன்னத்தி னுணருங் கிளவியு முளவே,
யின்ன வென்னுஞ் சொன்முறை யான`

என்னுஞ் சூத்திரவிதியால், இவ்வாறு கூறுதல் இயல்பெனக் கொள்க.

  கலைதொடக் கீண்ட கருவியந் தேன்பல கால்கொடுமா
மலைதொடுத் தூர்ந்து வருகின்ற தாற்றஞ்சை வாணன்வென்றிச்
சிலைதொடுத் தாங்கெழில் சேர்நுத லாய்பயில் செம்பழுக்காய்க்
குலைதொடுத் தோங்குபைங் கேழ்ப்பூக நாகக் குழாங்களந்தே.

     (இ-ள்.) தஞ்சைவாணன்  வெற்றிச் சிலைதொடுத்தாற்போலும் அழகு  சேர்ந்த
நுதலையுடையாய்!   பிறைக்கோடு  தீண்டக்  கிழிந்த  இறாற்றொகுதிகள்  தங்கிய
தேனானது ஒரு முகமாய் வாராது பலகால்கொண்டு பெரிய மலையுச்சி  தொடுத்துக்
கடந்து   நெருங்கிச்   சிவந்து   பழுக்காய்க்   குலைவைத்தோங்கப்பட்ட  பசிய
நிறத்தையுடைய  பூகக்குழாத்தையும்  நாகக்  குழாத்தையுங்  கவர்ந்து வருகின்றது;
நீ காண்பாயாக என்றவாறு.

கலை - பிறைக்கோடு. தொடுதல் - தீண்டுதல். கருவி - தொகுதி. தொடுத்து -
தொடங்கி. நாகம் - புன்னை. குழாம் என்பது பூகத்துடனுங் கூட்டுக. கவர்தல் -
கொள்ளுதல்.
(118)    
பாங்கி யிறையோற்கண்டமை பகர்தல்:
பாங்கி யிறைபோற்  கண்டமை பகர்தல் என்பது,  பாங்கி தலைவியின் வயத்தனாக
வந்தவனைக் கண்டமை பகர்தல்.


  திவாகர னேயன்ன பேரொளி வாணன்தென் மாறைநன்னாட்
டுவாவதி போலு மொனிர்முகத் தாயென் னொளிப்பதுன்மேல்
அவாவின னாகியொர் மானை வினாவிவந் தானையின்றிக்
கவானுயர் சோலையின் வாய்வண்ட லாருழைக் கண்டனமே.

     (இ-ள்.) ஆதித்தனையொத்த   பேரொளி   வாணன்  தென்மாறை   நாட்டு
உவாமதிபோதிலும் ஒளிர்முகத்தாய்!  நீ யொளித்துச்  சொல்வது  யாது  காரணம்?
உன்மேல் ஆசை கொண்டவனாகி  ஒரு  மானை வினவி  வந்தவனை  இப்போது
இநத்த் திரளாயுயர்ந்த சோலையிடத்து விளையாடும் வண்டலம்பாவை பொருந்திய
இடத்து யாம் கண்டனம் என்றவாறு.


1. தொல். சொல். எச்சவியல் - 36.