|
|
உலகத்தில் கலியிருள் மாற்றுந் தன்மையால், `திவாகரனே யன்ன` எனக் கூறியது.
|
ஒளி - கீர்த்தி. உவாமதி - பூரணமதி. ஒளிர்தல் - விளங்குதல். கவான் - திரட்சி. `மாயோ னன்ன மால்வரைக் கவான்` என்றார் பிறரும். வண்டல்: ஆகுபெயர். `வண்டலாடுழை` என்று பாடமோதுவாரும் உளர். |
(119) |
பாங்கியைத் தலைவி மறைத்தல்: |
| செவ்வண்ண வேல்விழி யாய்தஞ்சை வாணன்தென் மாறைநன்னாட் டிவ்வண்ண நீசொல்வ தேற்பதன் றானின் னிடையெனத்தாம் மெய்வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய்க் கைவண்ண வார்தழை கொண்டுசென் றார்தமைக் கண்டுகண்டே.
|
(இ-ள்.) செவ்வண்ணமாகிய வேல்போன்ற விழியினையுடையாய், தஞ்சைவாணன் தென்மாறை நன்னாட்டில், நின்னிடை போல தாம் மெய்வண்ணம் வாடிப் பயனின்றி வருந்தி நம் புனத்திற்குப் புதியோராய்க் கையிலே அழகிய நெடிய தழையைக் கொண்டுவந்து போனார் தம்மைக் கண்டு கண்டு, இவ்வண்ணம ்நீ சொல்வது ஏற்பதன்று என்றவாறு. |
செவ்வண்ண வேல் - பகைவருடற் குருதி தோய்ந்த கொடிய வேல். இவ்வண்ணம் - இவ்வாறு. ஆல் : அசைநிலை. வெறிதே - பயனின்றியே. விருந்தினர் - புதியோர். வண்ணம் - அழகு. கண்டு கண்டு: அடுக்குமொழி. |
(120) |
பாங்கி யென்னை மறைப்ப தென்னெனத் தழால்: |
பாங்கி என்னை மறைப்பது என்னெனத் தழால் என்பது, இவ்வாறு மறைத்துக் கூறிய தலைவியை உனக்கு நான் வேறோ என்று உவகையாய்த் தழுவிக்கொண்டு கூறல்.
|
| பரக்கின்ற செவ்விதழ்ப் பங்கயப் பாதம் பணிந்துநின்னை இரக்கின்ற தொன்றையும் எண்ணலை யாலெழு பார்முழுதும் புரக்கின்ற கோன்றஞ்சை வாணன்பொதியிலிற் பொய்த்தென்னைநீ கரக்கின்ற தென்னைகொ லென்னுயி ராகிய காரிகையே.
|
(இ-ள்.) ஏழுலக முழுதும் காக்கின்ற வேந்தாகிய தஞ்சை வாணனது பொதியவரைக்கண் எனக்கு உயிரையொக்குங் காரிகையே! செவ்விதழ் பரக்கின்ற பங்கயம் போன்ற பாதத்தைத் தொழுது யான் நின்னை யிரக்கின்ற தொன்றையும் எண்ணலையாய் உண்மையை நீக்கி என்னை நீ மறைப்பது என்னோ என்றவாறு.
|