கட
தஞ்சைவாணன் கோவை
132

 
     (இ-ள்.) நடுவு  நிலைமையையும் வாய்மையையும் உடையான்  எல்லார்க்கும்
புகழாலுயர்ந்த    தஞ்சைவாணனுக்கு    ஒன்னாரெனத்    துவண்ட   நுண்ணிய
இடையையுடையாய், வெற்பர் என்ணுவது விடையான்மேல் வருந்தன்மையையுடைய
மேருவில்லானோடும்,  மேழியைத்  தனக்கு  உறுப்பாகவுடைய வெற்றிப் படையை
யுடையானோடும் வெய்ய பகைகொள்வதோ, பிறிதோ, அறியேன் என்றவாறு.

     விடை - இடபம்; விடை ஆன்: பண்புத்தொகை.  மேரு வில்லான் - சிவன்.
மேழிவென்றிப்படை - கலப்பை.      படையான் - பலதேவன்.       சிவனுடன்
பகைகொள்ளுதல் - எருக்கமாலை   என்பு   மாலை   யணிதல்.  பலதேவனோடு
பகைகொள்ளுதல்  பனையை  வெட்டுதல்.  பனை  அவனுக்குக்   கொடியெனவே
மடலேறுங்  குறிப்புத்  தோன்றியது. `பிறிது` என்பதனால் வரை பாய்தல்  கொள்க.
பகல் - நடுவு  நிலைமை.  போலும்:  அசைநிலை.  1`ஒப்பில் போலியு மப்பொருட்
டாகும்`  என்பதனால்  அறிக.  மெய்ம்மை - வாய்மை.  கொல்: ஐயம்.   ஓகாரம்:
அசைநிலை.
(125)    
தோழி தலைவியை முனிதல்:
தூற்றா தலரை மறைப்பவர்க் கேகுறை சொல்லுகுற்றம்
ஏற்றா தொழியெனை யெம்பெரு மாட்டிசென் றேற்றவர்க்கு
மாற்றா தருள்செங்கை வாணன்தென் மாறையில் வந்துநெஞ்சம்
போற்றாது நின்றய லேன்சொன்ன தீங்கு பொறுத்தருளே.

    (இ-ள்.) எம்பெருமாட்டி,   தூற்றாது   அலரை    மறைக்கின்ற     நினக்கு
உண்மையானவர்க்கே நின் மனக்குறையைச் சொல், என்னைக் குற்றமேற்றாது விடு;
சென்று ஏற்றவர்க்கு இல்லை
யென்னாது கொடுக்குஞ் செங்கையை யுடைய வாணன்
தென்மாறை நாட்டில், நின்பக்கத்தில் வந்து நெஞ்சத்தைக் காவாமல்,
அயலேனாகிய
யான் அறியாமற் சொன்ன குற்றத்தைப் பொறுத்தருள்வாயாக என்றவாறு.

     `ஏனைக் குற்றம்` எனவும்,  `வந்துநின்று`  எனவும் இயையும்.  போற்றாது -
காவாது.
(126)    
தலைவி பாங்கியை முனிதல்:
தலைவி பாங்கியை முனிதல் என்பது, பாங்கியை முனிந்து தலைவி தன்னுட் கூறல்.

  மற்றே தவர்நினை வார்தஞ்சை வாணன் வரையின்முந்நாள்

1. தொல். சொல். இடையியல் - 30.