|
|
| பொற்றேரின் வந்து புணர்ந்துசென் றார்தம் பொருட்டுநம்மைக் குற்றவேல் மங்கை குறையிரந் தாளெனுங் குற்றமிந்நாள் எற்றே தவறுநம் பாலில்லை யாகவு மெய்தியதே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வரையில் மூன்றுநாள் பொற் றேரினில் வந்து புணர்ந்து சென்றார், அவர் மற்றேது நினைவார், அவர் தம்பொருட்டு நம்மைக் குற்றேவல் மங்கையாகிய இவள் குறை யிரந்தாளென்னுங் குற்றம் இந்நாள் நம்பக்கல் இல்லையாகவும் தவறெய்தியது எத்தன்மைத்து என்றவாறு. |
மற்று: அசைநிலை. `ஏது` என்புழி இரண்டனுருபு தொக்கது. முந்நாள் - மூன்றுநாள். அவையாவன: இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் என்பன. `தம்பொருட்டு` என்புழி, `அவர்` என்னுஞ் சுட்டுப்பெயர் வருவிக்க. `அவர் மற்றேது நினைவார்` எனவும், `இந்நாள் நம்பால்` எனவும், தவறு `எய்தியதே` எனவும் இயையும். |
(127) |
தலைவி கையுறை யேற்றல்: |
| ஆற்றுந் தலைவ ரருந்துய ராற்றினு மாற்றிலனாண் மாற்றும் புனையின் மயிலனை யாய்தஞ்சை வாணன்தெவ்வின் போற்றுங் கொடுவினை யேன்புனை யாவிடிற் போந்தலரே தூற்றுந் தழையென்றி தொன்றெங்ங னேவந்து தோன்றியதே.
|
(இ-ள்.) மயில்போல்வாய், தஞ்சைவாணன் பகைபோல மிக்காய்க் கூறுங்கொடிய வினையேன் அணிந்தேனாயின் நாணை மாற்றும், அணியாது தடுத்தேனாயின் எங்குஞ் சென்று அலரையே தூற்றும், தழையென்று பெயரிட்டுக் கொண்டு இஃதொன்று எவ்விடத்திலேயிருந்து இவ்விடத்தில் வந்து தோன்றியது. முன் நல்வினையாற்றுந் தலைவர் அரிய வேட்கையை ஆற்றல்செய்யினும் யான் ஆற்றிலன் என்றவாறு.
|
எனவே, தலைவி கையுறை வாங்கினாளாயிற்று. என்னை,
|
| `நல்வினை யாற்று முயர்நாண மாற்றுமலர் தூற்றலினால் வந்த துயர்.`
|
இன்: ஐந்தனுருபு ஒப்பின்கண் வந்தது. போற்றல் - மிக்காய்க் கூறல். யான் என்பது தோன்றா எழுவாய். தெவ் - பகை.
|
இவற்றுள் பாங்கி கூற்றாயனவெல்லாம், `குறைநயப்பித்தற்`கும் தலைவி கூற்றாயினவெல்லாம், `குறை நேர்தற்`கும் உரித்தாயினவாறு காண்க. |
(128) |