கட
தஞ்சைவாணன் கோவை
124

 
இறைவி கையுறையேற்றமை பாங்கி இறைவற் குணர்த்தல்:
போயா உளித்தலுங் கைகுவித் தேற்றபின் போற்றியன்பால்
சாயாத கொங்கையின் மேலணைத் தாள்தஞ்சை வான்வெற்பா
காயா மலரன்ன மேனிமெய் யாகநின் கையுறையே
நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே.

    (இ-ள்.) தஞ்சைவாணன்  வெற்பனே!  நீ  தந்த  கையுறையை நான் போய்க்
கொடுத்தலுங் கைகுவித்து ஏற்றாள், ஏற்றபின் அன்பினால் மிகவும்  புகழ்ந்து கூறி,
எஞ்ஞான்றுஞ்   சாயாத   கொங்கையின்மேல்   அணைத்தாள்,
    அணைத்துக்
காயாம்பூவை   யொத்த 
 நிறத்தைப்  பொருந்திய  மெய்யாகத்தையுடைய  நீயாக
நினைத்தாளல்லது மாந்தழையாக நினைத்திலள் என்றவாறு.

     எனவே,  நீ  வந்துழி   நிகழும்  உபசாரம்   யாவையும்   தழையினிடத்து
நிகழ்ந்ததென்று  கூறியவாறாயிற்று.  `யான்போய்`  எனவும், `அன்பினாற் போற்றி`
எனவும், `மெய்யாகம் நீயாக` எனவும் மாறுக.

     அளித்தல் - கொடுத்தல்.  போற்றி - புகழ்ந்து. மெய்யாகம்: பண்புத்தொகை.
மேனி - நிறம்.
(129)    
பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறல்:
  அணிமா மலர்மயி லைப்புயத் தூணங்கொ ளாகமெனும்
மணிமா ளிகைவைத்த வாணன்மண் காவலன் மாறைவெற்பா
துணிமா மரகதப் பாசறை வேலைச் சுடரவன்போல்
பணிமா மணிதிக ழும்பகல் யாங்கள் பயிலிடமே.

     (இ-ள்.) அழகாகிய மா என்னும் பெயரையுடைய திருமகளைப்  புயமென்னுந்
தூண்களையுடைய   மார்பென்னும்   மணிமாளிகையில்   வைத்த   வாணனாகிய
வேந்தனது  மாறை  வெற்பனே!    பகற்காலத்தில்   யாங்கள்   விளையாடுமிடம் பெருமையுடைய மரகதத் துண்டங்கள் போன்ற குருக்கத்தி  யிலையாற் பச்சைநிறம் பொருந்திய   முழையினிடத்தே  கடலிடத்துக்  கதிரோன்போல  நாகமாணிக்கங்க ளொளிவிடும் என்றவாறு.

     மலர்மயில் - திருமகள்.    ஆகம் - மார்பு.   `தூணம்`   என்புழி,   அம்:
பகுதிப்பொருள் விகுதி.    `மாமரகதத் துணி`    என மாறுக.    பாசறை - பசிய
குருக்கத்தியிலையாற்   செறிந்த முழை.   `குருக் கத்தி`  என்று செய்யுளிற் கூறிய
தில்லையெனின், மேல்வரும், `குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறல்` என்னுங்
கிளவிச் செய்யுளில்,  `பூமாதவிப்பந்தர்` என்று கூறினமையானும்,  மேற்  சொன்ன
குறியிடமூன்றுங் குருக்கத்தியென்று உய்த்துணர்ந்து