கட

 

தஞ்சைவாணன் கோவை
138

 
பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல்:
     பாங்கி  தலைவியைச்  சார்ந்து  கையுறை  காட்டல்  என்பது,   குறியிடத்து
நிறுத்திப்போயின  பாங்கி தலைவன்  போயினபின்தான்  கையுறைக்குப்  போயின
பாவனையாய்க் கையுறை கொண்டு வந்து காட்டல்.

பொய்போ லிடைநின் விழிபோற் குவளையம் போதிவைநின்
மெய்போ லசோக மிளிர்பூந் தழையிவை மெல்லியனின்
கைபோற் கவின்கொள்செங் காந்தளம் போதிவை கண்டருள்யான்
மைபோற் குழலிதந் தேன்தஞ்சை வாணன் வரையினின்றே.

    (இ-ள்.) மையை யொக்குங் குழலையுடையாய்! தஞ்சை வாணன் வரையினின்று
யான்  
  நினைக்குத்   தந்தேன்;   பொய்யை   யொக்கும்   இடையாய்;    நின்
கண்களையொக்குங்
 குவளைப்  போது இலை; நினது மெய்யைப்போ லொளிவிடும்
அசோகப் பூந்தழை இவை;  மெல்லிய  இயலையுடைய  நினது  கையைப்  போல
அழகுகொண்ட  செங்காந்தட்போது  இவை;    நீ  கண்டருள்வாய்   என்றவாறு.

     மிளிர்தல் - ஒளிவிடுதல். கவின் - அழகு. மை - மேகம். `பொய் போலிடை`
`மைபோற் குழலி` என இரண்டு முன்னிலை வந்தவாறு காண்க.   `தஞ்சைவாணன்
வரையின் யான்` என மாறுக. அம்மூன்றும் சாரியை.
(137)    
தலைவியைப் பாங்கிற் கூட்டல்:
  குளிநாண் மதிநுதற் கோகில மேநின் குழலிலெல்லாப்
பனிநாண் மலரும் பறித்தணிந் தேனிந்தப் பார்மடந்தை
தனிநா யகன்தஞ்சை வாணன்றண் சாரல் தனித்துநில்லா
தினிநா மகன்றிளை யார்விளை யாடிட மெய்துதுமே.

     (இ-ள்.) வளைந்த நாட்கொண்ட  மதிபோன்ற  நுதலையுடைய  கோகிலமே!
நினது குழலினிடத்தில்  வனத்திலுள்ள  குளிர்ந்த  முறுக்கவிழ்ந்த  மலரனைத்தும்
பறித்தணிந்தேன்;  இந்தப்  பூமடந்தைக்  கொப்பற்ற நாயகனான தஞ்சைவாணனது
குளிர்ந்த  மலைச்சாரலிடத்துத்  தனியாய்  நில்லாது இவ்விடத்தினின்றும் அகன்று,
இப்போது இளையார் விளையாடுமிடத்தை யாம் எய்துவோம் என்றவாறு.

     குனிநாண்மதி - பிறை.   `மதிநுதற் கோகிலம்`    என்றது   சிறப்புருவகம்.
தனி - ஒப்பின்மை. நாண்மலர் முறுக்கவிழ் மலர்.
(138)