|
|
பாங்கி தலைவியை நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல்: |
பாங்கி தலைவியை நீங்கித் தலைவற்கு ஒம்படை சாற்றல் என்பது தலைமகளை ஆயத்திற் கூட்டி மீண்டு வந்து தலைவற்கு ஓம் படை சாற்றல் ஓம்படை - மறவாமை.
|
| சின்னாண் மலர்க்குழல் காரண மாச்செவ்வி பார்த்துழன்று பன்னா ளுரைத்த பணிமொழி நோக்கிப் பழிநமக்கீ தென்னா திடைப்பட்ட வென்னிலை நீமற வேலிறைவா தன்னாக மெய்ப்புக ழான்தஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே.
|
(இ-ள்.) இறைவனே! தன் ஆகத்தை மெய்ப்புகழாய் நிறுத்தின தஞ்சைவாணன் தமிழ் வெற்பிடத்துச் சில நாண்மலரை யணிந்த குழலையுடையாள் காரணமாக அவளது பதம் பார்த்து வருத்தப்பட்டு, நேற்றும் இன்றுமாகிய பலநாள் உரைத்த தாழ்ந்த மொழியைக் கருதி, நமக்கிது பழியென்று சொல்லாது, நும்மிருவர்க்கும் நடுப்பட என்னிலைமையை நீ மறவாதிருக்கக் கடவை என்றவாறு. |
செவ்வி - காலம். உழன்று - வருந்தி. பணிமொழி - தாழ்ந்த மொழி. தன்னாகம் - தன்னுடல். இரண்டு நாளென்பதனைப் பன்னளென்று கூறிய தென்னையெனின், ஒன்றல்லன எல்லாம் பல என்பது தமிழ்நடை யாகலின் கூறியவறென்ற உணர்க. |
(139) |
உலகியல் மேம்பட விருந்து விலக்கல்: |
உலகியல் மேம்பட விருந்து விலக்கல் என்பது, உற்றார் அயலூரி லிருந்து வந்தால், அவர்க்கு ஊண்கொடுத்து உபசாரஞ் செய்தல் உலகியல்பாதலால், அவ்வுலகியல் பெருமைபடத் தலைமகனை எம்மூருக்கு வந்து இருந்துபோம் எனக்கூறிப் பகற்குறியை விலக்கல்.
|
ஆயின், விருந்தென்பது உண்டிக்குப் பெயரோவெனின், விருந்து என்பது புதுமை. உலகின்கண் மருவி ஊண்மேல் நின்றது. என்னை, ஒருவன் ஒருவற்கு விருந்து கூறினான் எனின், ஊண் கூறினன் என்பதல்லது புதுமை கூறினன் என்னும் பொருள் தராதாதலான், விருந்தென்பது ஊணென்றே கொள்க. |
| வலைப்பெய்த மான்றசை தேன்றோய்த் தருந்தி மரைமுலைப்பால் உலைப்பெய்த வார்தினை மூரலு முண்டுளங் கூருவகை தலைப்பெய்த நாளனை யான்தஞ்சை வாணன் சயிலத்தெம்மூர் இலைப்பெய்த தாழ்குரம் பைத்தங்கி னாலுமக் கென்வருமே.
|
(இ-ள்.) தலைவரே! வலை சுற்றுமிட்ட மானினது தசையைத் தேனிற் றோய்த்து அருந்தி மரைமுலையினின்று வரும் பாலினை உலையாகப் பெய்து அட்டு வடித்த தினைச்சோற்றை உண்டு, உளத்தின் மிகுந்த வுவகை வந்துகூடிய நாள் போன்றவனாகிய தஞ்சைவாணன் வரையிடத்து எம்மூரில் |