கட
143
ஒருசார் பகற்குறி

 
       கூடிய  சூரியனுடனே நெருநல் மாலைக் காலத்துச் சென்றவர்  அமையாத
விளையாட்டின்பத்தால்  அவ்விடந்தோறும்  நீங்கிய  ஆயக்கூட்டம்  என்னிடத்து
வாராத முன்னம் வருகிலார், யான் என்செய்வேன் என்றவாறு.

ஆல்: அசை. கூர் - மிகுதி.   ஆதரம் - காதல்.   நலம் - அழகு.   நென்னல் -
முன்னைநாள்.
(144)    
தலைவியைப் பாங்கி கழறல்:
       தலைவியைப்   பாங்கி   கழறல்   என்பது   பாங்கி   நீ   வருந்துவது
முறைமையன்றெனக் கட்டுரைத்தல்.  கழறல்  என்பது   கட்டுரை; இடித்துக் கூறல்,
உறுதிச் சொல். இவை ஒரு பொருட்கிளவி

  சிறந்தார் தெரிந்த செழுந்தமிழ் வாணன்தென் மாறைவெற்பர்
துறந்தா ரெனையென்று சோருவ தேளிந்தத் தொல்லுலகில்
பிறந்தா ரெவர்க்கும் பிரிவெய்து மால்வெய்ய பேரமர்க்கண்
புறந்தாழ் கரிய குழற்செய்ய வாயைய பூங்கொடியே.

     (இ-ள்.) வெவ்விய பெரிய போர்செய்யுங் கண்ணும்  புறப்பக்கத்தே  தாழ்ந்த
கரிய குழலும் சிவந்த வாயும்  உடைய  அழகிய  பூங்கொடி  போல்வாய்!  இந்தப்
பழைய வுலகின்கட் பிறந்தார் யாவர்க்கும் பிரிவு வாராமற் போகாது,  வந்தெய்தும்;
சிறந்த முன்னோர் ஆய்ந்த செந்தமிழைக் கற்ற  வாணனது  தென்மாறை  நாட்டுத்
தலைவர் என்னைவிட்டுத் துறந்தாரென்று நீ அயர்வது என்,  இனி அயரவேண்டா
என்றவாறு.

     சிறந்தார் - அகத்தியனார்,  தலைச்சங்கத்தார்  முதலாயினோர். சோருதல் -
அயர்தல். எண்ணும்மை. தொக்குநின்றன. ஐய - அழகாகிய.
(145)    
தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல்:
     தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல் என்பது, பாங்கி முன்னிலையாய்
நிற்கத்  தலைவி  அவள்மேல்  வெறுப்பால்  அவளை  நோக்கிக் கூறாது புறமாய்
மொழிதல்.

  பூவலர் வாளியி னீரற்ற போதுற்ற புன்மையல்லால்
காவலர் காமந் துறக்கிலென் னாங்கடம் பாய்மதுகை
மாவல வாணன் வயற்றஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா
மேவலர் போலுங் கழற்றுரை யாளர் வியனறிவே.

      (இ-ள்.) தலைவர் ஆசையைத் துறக்கில் பூவலரும் வாவி நீரற்ற  போதுற்ற
இழிவுபோலு மல்லாமல் யாதாம்; இதனை யறியாது கட்டுரை சொல்வாரது   விரிந்த
அறிவு, மதம்பாயும் வலியையுடைய யானைத்தொழில்