கட
145
ஒருசார் பகற்குறி

 
தலைவியைப் பாங்கி யச்சுறுத்தல்
தலைவியைப்  பாங்கி அச்சுறுத்தல் என்பது,  தலைவியைப்  பாங்கி  அச்சுறுத்திக்
கூறுதல்.

  1பேணற் கரியநின் பெண்மையு நாணமும் பேணியவர்
காணத் தகுமென்று காண்பதல் லாற்சுழி காதனெஞ்சு
பூணத் தருகினும் பொற்பல்ல 1ளாகுதல் கற்பல்லவால்
யாணர்த் தமிழுடை யான்வாணன் மாறையின் இன்னமுதே.

    (இ-ள்.) புதிதாய்ப்    புலவர்    பாடும்    தமிழையெல்லாம்    கொள்ளுந்
தன்மையையுடைய வாணன் மாறையின்
 இனிய   அமுதம்  போன்றவளே!  மிகுந்த
காதலை நெஞ்சு பூணத்தருகினும் விரும்பற் கரிதாகிய
நின் பெண்மையும் நாணமும்
விரும்பியவரே காணத் தகுமென்று கருதுவதல்லாமல், இவ்வாறு துன்பத்தாலழுங்கி
அழகல்லளாகுதல் கற்பல்ல என்றவாறு.

    பேணற்கரிய நின் பெண்மை - தவஞ்செய்து விரும்பினும்  எய்தற்கரிய பெண்
தன்மை.  பேணி - விரும்பி.  தேற்றேகாரம் விகாரத்தாற் றொக்கது.   காண்பது -
கருதுவது. பொற்பு - அழகு. யாணர் - புதுமை.

என்பதனால்  யாது  கூறியதெனின்,  துன்பமுறவே  அத் துன்பத்தால் நலனழியும்,
நலனழியவே  அன்னைக்கு   ஐயந்தோறும்;   தோன்றவே  இற்செறிப்பு   வரும்.
வேற்றுவரைவு  நேரினும் நேரும். ஆதலான்,  கற்புக் கெடுமென்று அச்சமுறுத்திக்
கூறியவாறாயிற்று.
(148)    
நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்:
     நீங்கற்கு  அருமை  தலைவி  நினைந்து இரங்கல் என்பது, தலைவன் விட்டு
நீங்கற்கு அருமையைத் தலைவி நினைந்து தன்னுள் இரங்கிக் கூறல்.

  2குன்றா கியபொன்னும் வேழக் குழாமுங் கொடைபுகழ்ந்து
சென்றார் முகக்குஞ் செழுந்தஞ்சை வாணன்தென் மாறைவெற்பில்
நன்றா மிறைவற்கு நன்றியி 2லேற்குமுன் நான்முகத்தோன்
ஒன்றா விதித்தில கேயுயிர் போல உடம்பையுமே.

     (இ-ள்.) நெஞ்சமே!  பொன்னாகிய  மலையையும்   யானைத்   திரளையும்
கொடையைப்    புகழ்ந்து     சென்றோர்கள்    பரிசிலாய்க்     கொள்ளப்பட்ட
செழுமையையுடைய தஞ்சைவாணனது தென்மறைநாட்டு வெற்பிடத்து,


1. (பாடம்) வாகுதல்.
2. (பாடம்) லேற்குமந் நான் முகத்தோன்.