கட
தஞ்சைவாணன் கோவை
146

 
நல்வினை செய்த இறைவர்க்கும்,  தீவினை செய்த எனக்கும்,   நான் முகத்தோன்
முன்  இருவரையும் படைக்குங்  காலத்தில்  உயிர்போல்  உடம்பையும்  ஒன்றாய்
விதியாமற்போயினான்; இனிச் செய்யுமாறு என் என்றவாறு.

வேழக்குழாம் - யானைக் கூட்டம்.  முகத்தல் - கொள்ளுதல்.  நன்றி - நல்வினை.
`முகக்குஞ் செழுந்தஞ்சை வாணன்`  என்னும்    பெயரெச்சம்   வினைமுதலோடு
முடியாது பிறவாற்றான் முடிந்தது.
(149)    
தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல்:
  நெஞ்சுக வாய்மல ரன்னகண் ணீர்மல்க நின்றவஞ்சொல்
கிஞ்சுக வாய்வஞ்சி கேட்டருள் நீயுங் கிளைந்தமிழோர்
தஞ்சுக வாய்மொழி நெஞ்சுடை யான்தஞ்சை வாணன்வெற்பில்
மஞ்சுக வார்த்தன வாலவர் தேரின் மணிக்குரலே.

    (இ-ள்.) நெஞ்சம்  உதிரும்படி ஆய்ந்த  மலர்போன்ற,  கண்ணினிடத்து  நீர்
நிறைய நின்ற,  அழகிய  சொல்லையும் முருக்கம்பூப்
 போன்ற வாயையும் உடைய
வஞ்சியே!  கிளைத்  தமிழையுடைய
 பெரியோர் தம் வாயுறை வாழ்த்தாகக் கூறிய
மொழியை  நெஞ்சிலே துறவாது வைத்திருக்குந்  தன்மையனாகிய
 தஞ்சைவாணன்
வெற்பில்,  அவரது தேரில் மணிக்குரல்  முகிலுதிர வார்த்தன;  யான் கேட்டேன்,
நீயும் கேட்டருள்வாய் என்றவாறு.

    நெஞ்சுக - நெஞ்சம்  உதிர.    ஆய்மலர் - மலருள்  தெரிந்தெடுத்த  மலர்.
கிஞ்சுகம் - முருக்கம்பூ: ஆகுபெயர் உம்மை: எச்சவும்மை. கிளைத்தமிழ் - விரிந்த
தமிழ்.   `வாய்ச்சுகமொழி`   என    இயையும்;    அது   வாயுறை    வாழ்த்து,
மஞ்சுக - மஞ்சுதிர. ஆர்த்தன - ஒலித்தன. மணிக்குரல் - மணியோசைகள்.

    இனித் தேரின்  மணியோசை  முகிலுதிர  ஆரவாரத்துடன்  வாந்தானெனின்,
களவென்பதனோடு   மாறுகொள்ளுமே   யெனின்,  மாறுகொள்ளாது.   என்னை,
நால்வகைப்  புணர்ச்சியினும் தலைவன் தேரோடும் சேனையோடும்  வந்தானல்லது
தமியனாய் வந்தானல்லன். எவ்வாறெனின், காட்சியிற் கூறியதானுணர்க;  அன்றியும்
பிரிவுழி   மகிழ்ச்சியில்,   `பாகனொடு  சொல்லல்`   என்பதனானும்,   பாங்கியிற்
கூட்டத்தில், `தலைவி பாங்கியை முனிதல்` என்னுங் கிளவிச் செய்யுளில் முன்னாள் பொற்றேரின்  வந்து  புணர்ந்து சென்றார்  என்றுங் கூறினமையானும்,  மேல்வரை விடைவைத்துப் பொருள்வயிற் பிரிவோன் மீண்டு வருங்கால் பாகனொடு கூறலினுந
்தேர்முந்த    வேண்டுமென்று    கூறுதலானும்,    வருந்தொறும்    தேரொடுஞ்
சேனையொடும் வந்து, குறியிடத்துத் தமியனாய் வருதல் என்று உணர்க.
(150)