கட
தஞ்சைவாணன் கோவை
148

 
தோழி தலைமகற்கு முன்னிலைப் புறமொழி
மொழிந் தறிவுறுத்தல்:
தோழி தலைமகற்கு முன்னிலைப்  புறமொழி  மொழிந்து  அறிவுறுத்தல்  என்பது,
தலைவன்    முன்னிலையாய்  நிற்பத்,  தோழி  தலைமகனைக்  காணாள்போலப்
புறமொழியாய்ப் புட்களை நோக்கிக் கூறுவாள் போன்று செறிப்பறிவுறுத்தல்.

  பயில்காள பந்திப் புயலன்ன வோதியைப் பைங்கிள்ளைகாள்
மயில்காள் சிறிது மறக்கப் பெறீர்தஞ்சை வாணன்வெற்பில்
குயில்காள மெங்கு மியம்புதண் சோலையிற் கூடியின்பம்
அயில்காள வெங்கதிர் வேலன்பர் சால அயர்ப்பினுமே.

    (இ-ள்.) பைங்கிள்ளைகாள், மயில்காள், நெருங்கிய கரிய  பந்தியாயிருக்கின்ற
புயல்போன்ற   வோதியை  யுடையாளைத்,  தஞ்சைவாணன்  வெற்பில்   
 குயில்
காளம்போல்  எங்கும்  ஒலிக்குங்  குளிர்ந்த  சோலையிற்கூடி  இன்ப
  மருந்தும்
விடம்போன்ற வெங்கதிர் வேலையுடைய அன்பர் மிகுதியும்
 மறந்தாலும்,  நீங்கள்
சற்றும் மறக்குந் தன்மையைப் பெறீராக என்றவாறு.

எனவே, யாம் ஊர்க்குப் போகாநின்றோம் எனச் செறிப் புணர்த்தலாயிற்று.

பயிலுதல் - நெருங்குதல்.   காளம் - கருமை.   பந்தி - நிரை.    ஓதி - கூந்தல்.
காளம் - காகளம்.      இயம்பல் - ஒலித்தல்.         அயிலுதல் - அருந்துதல்.
காளம் - விடம். அயர்த்தல் - மறத்தல்.
(152)    
பாங்கி தலைமகன் முன்னின்றுணர்த்தல்:
  கானலங் கான்மலர்க் கள்வாய்க் கருங்கணி கட்டுரையால்
கூனலஞ் சாய்பொற் குரலுங்கொய் தாரெமர் கொற்றவயாம்
ஏனலங் காவலு மின்றே யொழிந்தன மேழ்புவிக்கும்
தானங் காரமன் னான்றஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே.

     (இ-ள்.) கொற்றவ! ஏழுலகுக்கும் கீர்த்தியால் அலங்காரம்  போன்றவனாகிய
தஞ்சைவாணன்   வெற்பிடத்துச்  சோலையில்  அழகிய   மணத்தோடுங்  கூடிறய
மலரிலிருக்குங் கள்ளைத் தன்னிடத்திலேயுடைய பெரிய  வேங்கை  மரத்தினுடைய
கட்டுரையால், எமர்  தலை  வளைந்து  சாய்ந்த  பொன்றிமாகிய  தினைக்கதிரைக்
கொய்கின்றா ராதலால், திகைப் புனங்காவலும் இன்று ஒழிந்தனம் என்றவாறு.

  கானல் - சோலை. கான் - மணம். கணி - வேங்கை. கட்டுரை - உறுதிச்சொல்.