கட
149
ஒருசார் பகற்குறி

 
      வேங்கை பூக்குங்காலம்  தினைக்கதிர் கொய்யுங்  காலமாதலால்,  வேங்கை
கட்டுரையால் தினைக்கதிர் கொய்கின்றார் என்று கூறியது.

  1`வாராக் காலத்த நிகழுங் காலத்தும்`

      என்னுஞ் சூத்திரவிதியால் கொய்கின்றார் என்னும் நிகழ்காலச்  சொல்லைக்,
`கொய்தார்` என  விரைவுபற்றி  இரந்தகாலத்தாற்  கூறினாரென  வுணர்க.   முன்,
`இறைவனைக் குறிவரல் விலக்கல்`  செய்யுளில் 2`புனமும்  பகந்தினைச்   செங்குர
லேந்தும்` என்று கூறியதனானும், `கொய்கின்றார்` என்றே கொள்க.

     கூனல் - தலைவளைதல்.   குரல் - கதிர்.  ஏனல் - தினை.   `சோலையில்
அழகிய  மணத்தோடுங்  கூடிய  மலரிலிருக்குங் கள்  வாயினிடத்து நாறுங் கரிய
நிறத்தையுடைய    கணிக்காரிகை     கட்டுரையால்`     எனினும்    அமையும்,
கணிக்காரிகையைக் கேட்டுத் தினைகொய்தல் அவர்க்கியல்பாகலின்.
(153)    
பாங்கி முன்னின் றுணர்த்தி யோம்படை சாற்றல்:
     பாங்கி   முன்னின்று  உணர்த்தி  ஓம்படை  சாற்றல்  என்பது,  அவ்வாறு
முன்னின்று உணர்த்திய பாங்கி எம்மை மறவாமை வேண்டுமென்று கூறுதல்.

  கனஞ்சாய நல்கிய கையுடைய யானெதிர் கன்றினர்தம்
மனஞ்சாய வென்றருள் வாணன் வரோதயன் மாறைவெற்பில்
சினஞ்சாலும் வேலண்ண லேமறவே லெம்மைச் செவ்வியிரு
தனஞ்சா யினுமினி நின்னையல் லாதில்லைத் தாழ்குழற்கே.

     (இ-ள்.) கொடையில்  மேகஞ்சாயக்  கொடுக்கப்பட்ட  கையை  யுடையவன்
வீரத்தா  லெதிராகிச்  சினந்தவர்  மனஞ்சாய   வென்றருளிய   வரோதயனாகிய
வாணனது   மாறை   வெற்பில்   கோபமையும்   வேலையுடைய    தலைவனே!
அழகையுடைய  இரு  தனம்  சாயினும்  இனித்  தாழ்ந்த   குழலையுடையாட்குப்
பற்றுக்கோடு நின்னையல்ல தில்லையாதலால் எங்களை மறவேல் என்றவாறு.

      கனம் - மேகம்.     சாய்தல் - நிலைதளர்தல்.     நல்கல் - கொடுத்தல்.
மனஞ்சாய - செவ்விதி னில்லாது வளைய       சினஞ்சாலும் - சினம் நிறையும்.
செவ்வி - அழகு.   தனஞ்சாய்தல் - முலைசரிதல்.      `தனஞ் சாயினும்` என்று
இங்ஙனங் கூறுதல்,  எடுத்துக்கோடற்  கண்ணே  எஞ்ஞான்றும் ஒரு  தன்மையர்
என்று கூறியதனோடு மாறு கொள்ளும் எனின், மாறுகொள்ளாது, என்னை,

1. தொல். சொல். வினையியல் - 44.
2. தஞ்சைவா - 156.