|
|
வெனின், அன்று. தலைவனை அவனாட்டணியயில் வினாவுழித் தலைவன் தன்னாட்டணியியல் வினாவும், வினாவுழி அணியியல் கூறும்வழி அதுவே குறியிடமாகக் கூறலாம் என்று கருதிப் பாங்கி வினாவியவாறென்று உணர்க.
|
| பூந்தழை யாது மலைமலர் யாது புனையிழையும் சாந்தமும் யாது தடம்பொழில் யாது தரணியின்மேல் மாந்தரில் வேளன்ன வாணன்தென் மாறை வளநகர்சூழ் தேந்தரு சோலைவெற் பாவுங்கள் நாட்டுறை செல்வியர்க்கே.
|
(இ-ள்.) புவியின்மேல் மாந்தருக்குள் வேளையொத்த வாணன் தென்மாறை வளநகர்சூழ் தேனைத் தரும் மலரையுடைய சோலைவெற்பனே! உங்கள் நாட்டுறையும் செல்வியர்க்கு இடையிலுடுக்கும் பூந்தழை யாது? சூடும் மலர் யாது? அணியும் அணியொடு பூசுஞ் சந்தனமும் யாது? விளையாடும் பெரிய பொழில் யாது? சொல்வாயாக என்றவாறு. |
மலைதல் - சூடுதல். புனைதல் - அணிதல். இழை - அணி. உம்மை இரண்டும் அசைநிலை; எண்ணும்மை யாகாதோ வெனின் ஆகின் பன்மை வாசகங் கொண்டு முடியுமாகலான், எண்ணும்மையாகாது; ஆதலால் மூன்றனுருபு வருவித்துரைக்கப் பட்டது. தடம்பொழில் - பெரிய பொழில். தேம் - தேன். |
(166) |
தலைவ னவணாட் டணியியல் வினாதல்: |
தலைவன் அவள் நாட்டு அணி இயல் வினாதல் என்பது பாங்கி குறிப்பு அறிந்து அவள் நாட்டு அணி இயலைத் தலைவன் வினாதல்.
|
| எந்நாட் டவரணி கூறியென் பேறிங் கிகல்வடிவேல் மைந்நாட்ட வெண்முத்த வாணகை யாய்தஞ்சை வாணன்மண்மேல் உந்நாட் டரிவைய ராடிடஞ் சாந்த மொளியிழைபூ மொய்ந்நாட் டழையொடெல் லாமொழி யாமல் மொழியெனக்கே. |
(இ-ள்.) போர்செய்யும் கூரிய வேல்போன்ற மையெழுதிய நாட்டத்தையும், வெண்முத்துப்போன்ற வொளி நகையையும் உடையாய்! எங்கள் நாட்டவர் அணியும் அணி முதலிய கூறிப் பெறுவதியாது, தஞ்சைவாணன் மண்மேல் இவ்விடத்து உங்கள் நாட்டு அரிவையர் ஆடிடமும், பூகஞ்சாந்தும், அணியும் ஒளிப்பூணும், முடிக்கும் பூவும், மொய்த்த நாட்டழையோடு எல்லாம் விடாமல் எனக்கு மொழிவாயாக என்றவாறு. |
இங்கு - இவ்விடம். இகல் - போர். நாட்டம் - கண். வாள் - ஒளி. `வடிவேல் நாட்டம்,` `வெண்முத்தநகை` இரண்டும் உவமைத் தொகை. மொய்த்தல் - செறிதல். |
(167) |