கட
தஞ்சைவாணன் கோவை
162

 
மாகம் - வானுலகு.           தரியலர் - பகைவர்.          குடம்பை - கூடு.
வேய்தல் - பொருந்துதல்.   சோகம் - துன்பம்.    தோகை - மயில்.
(173)    
இறைவிக் கிறைவன் வரவறி வுறுத்தல்:
  கந்தார நாணுங் கனிந்தசொல் லாய்நங் கடிமனைக்கே
வந்தார் அவாவின் பெருமையி னாற்றஞ்சை வாணன்வெற்பில்
கொந்தா ரசோகந் தருஞ்செழும் போதுங் கொழுந்தழையும்
தந்தா ரகலந் தழீஇயக லாது தணந்தவரே.

    (இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பில் கந்தாரம்  நாணும்  தித்தித்த  சொல்லாய்!
கொத்தார்ந்த  அசாகத்தரு  தரப்பட்ட  செழும்
 போதும்  கொழுந்தழையும் தந்து
நிறைந்த முலையைத் தழீஇ மனத்தாற் பிரியாது மெய்யாற் பிரிந்த,
ஆதரங்கொண்ட
அவாவின் பெருமை யினால், நமது விளங்கிய மனைக்கு வந்தார் என்றவாறு.

    கந்தாரம் - ஒரு பண்.     கனிதல் - தித்தித்தல்.         கடி - விளக்கம்.
கொந்து - கொத்து. அகலம்: ஆகுபெயர். தணத்தல் - பிரிதல்.
(174)    
தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல்:
  மின்னே யயிலொடு மின்விளக் காவந்த வெற்பரைநாம்
பொன்னே யெதிர்கொளப் போதுகம் வாபுவி யேழினுக்கும்
தன்னேயம் வைத்தருள் சந்திர வாணன் தமிழ்ச்சிலம்பில்
நின்னே ரியன்மயில் கண்டுயில் நாக நிழலகத்தே.

     (இ-ள்.) ஏழ்புவிக்கும்  தன்  அன்பை  வைத்தாளப்பட்ட  சந்திர  வாணன்
தமிழச்சிலம்பி  லிருக்கப்பட்ட  பொன்  போன்றவளே! நின்  இயலுக்கு  நேராகிய
மயில் கண்ணுறங்கும் புன்னாக நிழலகத்து  ஒளிபொருந்திய வேலுடனே  மின்னும் விளக்காகக்  கங்குலில்  வந்த வெற்பரை  நாம்  எதிர்கொள்ளப்   போதுகம் வா
என்றவாறு.

     மின் - ஒளி. ஏய்தல் - பொருந்துதல். அயில் - வேல். பொன் : ஆகுபெயர்.
நேயம் - அன்பு. தமிழ்ச்சிலம்பு - பொதியமலை. இயல் - சாயல். `நின் இயல்` என
மாறுக.
(175)    
குறியுய்த் தகறல்:
     குறி   உய்த்து  அகறல்  என்பது,   பாங்கி  தலைமகளைக்  குறியிடத்துச்
செலுத்தித் தான் அகன்றுபோதல்.

  மந்தார மன்னகை வாணன்ததென் மாறை மயிலனையாய்
நந்தா வனப்பொய்கை நான்கொய்கு வேன்குழ னாணுங்கங்குல்
கொந்தார் தெரியனின் செங்கனி வாயொடுங் கொங்கையொடும்
பைந்தா மரையையுஞ் சேதாம் பலையும் பகைப்பித்ததே.