|
|
புணர்தல்: |
| சுழிநீ ரலைகடற் றெல்லுல கேழினுந் தோற்றும்வண்மைக் கழிநீடு மாடக மேருவின் மீதினுங் காவல்கொண்டு வழிநீள் புகழ்கொண்ட வாணன்தென் மாறை வரையின்மலர்ப் பொழினீழ லும்ப ரமுதனை யாரைப் புணர்ந்தனமே.
|
(இ-ள்.) சுழிந்த நீரும் அந்நீரி லலையும் பொருந்திய கடல் சூழ்ந்த பழையவுல கேழினும் புரக்குஞ் செல்வமிகுதி நீண்டு பொன்மேருவின் மீதினுங்காக்குந் தொழிலைக் கொண்டு, அத்தொழில் வழியே நீண்ட புகழைக் கொண்ட வாணன் தென்மாறை வெற்பிற்றோன்றிய மலர்ச் சோலை நிழலில் தேவாமிர்தம் போல்வாரை யாம் புணர்ந்தனம் என்றவாறு.
|
யாம் : தோன்றா எழுவாய். `சுழிநீரலை` என்புழி உம்மைத் தொகை. தொல்லுலகு - பழைய வுலகு. வண்மை - வளம். கழி - மிகுதி. ஆடகமேரு - பொன்மேரு. உம்பரமுதம் - தேவாமிர்தம். |
(180) |
புகழ்தல்: |
| மண்ணார் பெரும்புகழ் வாணன்தென் மாறை1 வரைபயிலும் தண்ணார முங்கமழ் சார்வருஞ் சாரலிற் சார்ந்தறையும் பெண்ணா ரணங்கன்ன நின்முகந் தான்கண்ட பின்னுமுண்டோ கண்ணார் தடங்களின் வாயொடுங் காத கமலங்களே.
|
(இ-ள்.) நிலவுலகம் நிறைந்த பெரிய புகழுடைய வாணன் தென்மாறைவரையில் பயிலுந் தட்பமாய்ச் சந்தனமும் நாறுகின்ற பிறரொருவர் நார்தற்கரிய மலைச்சாரலிற் சார்ந்து உறையும் ஆரணங்கு போன்ற பெண்ணே! நின் முகத்தைக் கண்ட பின்னும் இடமார்ந்த பொய்கைகளில் வாய்குவியாத கமலங்களுண்டோ, இல்லை என்றவாறு.
|
`நின் முகத்தை மதியமென்று கருதி வாயொடுங்காத கமலமுண்டோ` எனினும் அமையும். மண் - நிலவுலகம். ஆர்தல் - நிறைதல். ஆரம் - சந்தனம். தென்மாறைவரை - பொதியம். `ஆரணங் கன்னபெண்` என இயையும். பெண்: அண்மைவிளி. கண் - இடம். ஒடுங்கல் - குவிதல். |
(181) |
இறைமக ளிறைவனைக் குறிவரல் விலக்கல்: |
| மூரற் கதிர்முத்த வார்முலை யாவியின் மூழ்கத்தனி வாரற்க நீதஞ்சை வாணன்வெற் பாவய மாவழங்கும் வேரற் கடிய கவலையி னூடு வெயிலவற்கும் சாரற் கருமைய தாலிருள் கூருமெஞ் சாரலிலே.
|
|
1. (பாடம்) வரையகிலும். |