கட
தஞ்சைவாணன் கோவை
166

 
(இ-ள்.) தஞ்சைவாணன்  வெற்பனே, வயமாவாகிய சிங்கம் புலி யானை  இவைகள்
சஞ்சரிக்கும்  வேரல் நெருங்கிய  கடியவாகிய கவர்வழியாய், உள்ளே  வெயிலவன்
கிரணங்கட்கும்   சேர்தற்கருமை   யுடைத்தாதலால்,   எக்காலமும்   இருள்மிகும்
எஞ்சாரலிடத்து  நகைத்தல் போன்ற கதிரையுடைய முத்தமும் கச்சும்  பொருந்திய
முலையென்னும் வாவியில் முழுக நீ தனியே வாரற்க என்றவாறு.

    மூரல் - நகை.  கதிர் - கிரணம்.  `முத்தம்வார்` என்புழி  உம்மைத் தொகை.
வார்முலை - கச்சிறுக்கிய முலை.  ஆவி - வாவி.   வயமா,  புலி யானை சிங்கம்
முன்றிற்கும்  பொதுவாதலான்
 இம் மூன்றையும் கூறப்பட்டது.  வேரல் - மூங்கில்.
கவலை கவர்வழி. வெயிலவன்: ஆகுபெயர். கூர் - மிகுதி.
(182)    
இறைவியை இல்வயின் விடுத்தல்:
     இறைவியை இல்வயின் விடுத்தல் என்பது,  தலைவன் தலைவியை மனையிற்
செல்லென விடுத்தல்.

  மல்லையம் போர்வென்ற வாணன்தென் மானறநின் மாளிகையாம்
தொல்லையம் போருகந் தேடவுங் கூடுந் தொடித்தளிரால்
முல்ல்யம் போது முகையுங்கொய் யாது முகிழ்முலையாய்
செல்லையம் பொற்பனிங் கிற்றலம் பாதஞ் சிவப்பிக்கவே.

     (இ-ள்.) மல்லை  யென்னும்   ஒரூரிடத்தில்  போரை  வென்ற   வாணன்
தென்மாறைநாட்டிருக்கின்ற  முகை  போன்ற  முலையாய்!  நின்  மாளிகையாகிய
பழைமையுடைய தாமரை யானது தேடவும் அமையுமாதலால் தொடி செறிந்த தளிர்
போன்ற கையினால்  முல்லைப்போதும்  அதனது  முகையுங் கொய்யாது அழகிய
பளிங்குத் தலத்தைப் பாதமானது சிவப்பேறச் செய்யச் செல்லக்கடவை என்றவாறு.

     மல்லை - ஓரூர்.    `தொடித்தளிர்`  ஆகுபெயர்.  அம் : சாரியை.   அம்:
அசைநிலை.   செல் - செல்லக்கடவை ஐ : சாரியை.   பொன் - அழகு.   `தலம்`
என்புழி இரண்டனுருபு தொக்கது.
(183)    
இறைவியை யெய்திப் பாங்கி கையுறை காட்டல் :
  முகையா யலராய் முலைக்குநின் வாய்க்கு முறைமுறையே
பகையா முளரியுஞ் சேதாம் பலுமிவை பைங்கழுநீர்
வகையார் தொடைபுனை வாணன்தென் மாறையின் மௌவலன்ன
நகையா யவையிவை நின்குழற் காமுல்லை நாண்மலரே.

     (இ-ள்.) பசிய     கழுநீர்    வகையார்ந்த    மாலையணிந்த     வாணன்
தென்மாறைநாட்டின் மௌவல் போன்ற நகையினையுடையாய்! முகையாய்