|
|
அலராய் முலைக்கும் நின்வாய்க்கும் நிரனிறையாய்ப் பகையான தன்மையுடைய தாமரையும் செவ்வாம்பலும் இவை கண்டருள்; முல்லைநாண் மலராகிய இவையும், முன்காட்டிய அவையும் நின் குழற்குச் சூடுதற்காம் என்று கொண்டுவந்தேன் என்றவாறு.
|
முளரி - தாமரை. சேதாம்பல் - செவ்வாம்பல். கழுநீர் - குவளை. வௌவல் - முல்லை. இரவுக்காலமாதலால் தாமரையை முகை யென்றும், ஆம்பலையும் முல்லையையும் மலர் என்றும் கூறியவாறென்று உணர்க. |
(184) |
இற்கொண் டேகல்: |
இற்கொண்டு ஏகல் என்பது, தலைவியைப் பாங்கி மனையிடத்திற் கூட்டிப் போதல். |
| ஒல்கா விருண்மணந் தொல்கரும் போழிதி னுணர்ந்துநம்மை நல்கா வியல்பன்னை நாடினும் நாடு நடந்தருள்நீ மல்காவி சூழ்தஞ்சை வாணன்தென் மாறையின் வள்ளையின்மேல் செல்காவி யன்ன விழித்திரு வேநின் திருமனைக்கே.
|
(இ-ள்.) நிறைந்த பொய்கை சூழ்ந்த தஞ்சைவாணன் தென்மாறையில் வள்ளையுன்மேற் செல்லுங் காவி போலக் காதின்மேற் செல்லும் விழியையுடைய திருவையொப்பவளே! நம்மை நல்கும் அவ்வியல்பினையுடைய அன்னை சுருங்காத இருளைப் பொருந்திச் சுருங்குதற்கரிய இராப்போதிற் றுயில் எழுந்து தேடினுந் தேடுமாதலினால், நின் திருமனைக்கு நீ நடந்தருள் என்றவாறு.
|
ஒல்கா - சுருங்கா. உணர்தல் - குயிலெழுதல். நல்கல் - பயத்தல். ஆவியல்: சுட்டுநீண்டது. மல்கல் - நிறைதல். ஆவி - பொய்கை. வள்ளை - வள்ளைக்கொடி. காவி - நீலம். |
(185) |
பிற்சென் றிறைவனை வரவுவிலக்கல்: |
பிற்சென்று இறைவனை வரவு விலக்கல் என்பது, பாங்கி தலைமகளை மனையிற் சேர்த்த பின்பு தலைமகன் பாற்சென்று இவ்விருளினில் நீ வாரல் என்று வரவு விலக்கிக் கூறுதல். |
| வெம்போர் முருகென்ன வேல்வல னேந்தி வெறிதிங்ஙனே வம்போர் நகரெல்லி வாரல்வெற் பாமரு வாவரசர் தம்போர் கடந்த தடம்புய வாணன் தமிழ்த்தஞ்சைநாட் டம்போ ருகமல்ல வோதிருக் கோயி லணங்கினுக்கே.
|
(இ-ள்.) வெற்பனே! பகைவேந்தர்தம் போரைக் கடந்த தடம்புயத்தையுடைய வாணன் தமிழ்த்தஞ்சை நாட்டின்கணுள்ள அணங்கு |