கட
தஞ்சைவாணன் கோவை
168

 
போல்வாட்குத்   திருக்கோயில்     அம்போருகம்   அல்லவோ,    ஆதலினார்;
வெம்போரில் முருகவேளென்று சொல்ல வேலை வலத்திலே யேந்திப்  பயனின்றிப் புதுமை ஆராயும் நகரிடத்து இராப்பொழுதில் இவ்விடத்தில் நீ வாரல் என்றவாறு.

    முருகு - முருகவேள்.   வலன் - வலப்பக்கம்.  வம்பு - புதுமை.   ஓர்தல் -
ஆராய்தல்.  எல்லி - இராப்போது.  `அல்லவோ`
 என்னும்  ஓகாரம்  எதிர்மறை.
அம்போருகம்  இராக்காலத்தில்   கதவு   திறவாதாதலால்  தலைவி
 மனைவிட்டு
வெளிவருதல் அரிது எனக் குறிப்பால் அறிவித்தவாறு உணர்க.
(186)    
பெருமகன் மயங்கல்:
     பெருமகன்  மயங்கல்  என்பது,  பாங்கி  இவ்வாறு  இரவுக்குறி   விலக்கிய
சொற்கேட்டுத் தலைமகன் மயங்கிக் கூறல்.
  வஞ்சங் கலந்த கலிவென்ற வாணன்தென் மாறைவெற்பில்
தஞ்சங் கலந்தசொல் தையலும யானுந் தனித்தனியே
நெஞ்சங் கலந்த நிலைமையெல் லாங்கண்டு நீயமுதின்
நஞ்சங் கலந்தனை யேநனை வார்குழல் நன்னுதலே.

     (இ-ள்.) வார்ந்து   அரும்பை   முடித்த   குழலையும்  நல்ல   நுதலையும்
உடையாய்!  வஞ்சனை  கலந்த  கலிகாலத்தை  வென்ற  வாணன்    தென்மாறை
வெற்பில்    பற்றுக்கோடாகக்   கலந்த   சொல்லையுடைய   தையலும்   யானும்
தனித்தனியே நெங்சங் கலந்த நிலைமை யெல்லாங் கண்டும், நீ உண்ணும் அமுதில் நஞ்சங் கலந்தாற் போலும், வாரல் என்னுஞ் சொல்லைச் சொல்லினை என்றவாறு.

     தஞ்சம் - பற்றுக்கோடு. நனை - அரும்பு. வார்தல் - சீப்பிடுதல்.
(187)    
தோழி தலைமகள் துயர்கிளந்து விடுதல்:
     தோழி தலைமகள் துயர்கிளந்து  விடுதல் என்பது,  தோழி  தலைமகனுக்குத்
தலைமகள்  துயரைக் கூறி  நீ  ஊர்போய்ச்  சேர்ந்த  செய்தி  யாம்  அறியும்படி
குறிசெய் என்று கூறிவிடுதல்.

  முன்னூ ராவுந் தெரியா விருணெறி முன்னிநையும்
மின்னூர் புனையிழை மின்னனை யாளுய்ய வேலின்வெம்போர்
மன்னூர் களிறு திறைகொண்ட வாணன்தென் மாறையன்ன
நின்னூ ரகம்புகுந் தாற்குறி காட்டு நெடுந்தகையே.

     (இ-ள்.) நெடுந்தகையே!  முன்னே  ஊரப்பட்ட  அரவும்  தெரியா  இருள்
செறிந்த  நெறியென்தனை   நினைந்து  நையும்  ஒளியூர்ந்த   அணியையணியும்
மின்போன்றவள்  உய்யும்பொருட்டு,  வேலினால் வெய்ய போரிற்   பகைவேந்தன்
ஊரப்பட்ட  களிற்றைத்  திறையாகக்  கொண்ட   வாணன்   தென்மாறைபோன்ற
நின்னூருட் புகுந்தால், ஓர் அடையாளங் காட்டுவாயாக என்றவாறு.