|
|
`அரவும்` என்புழி உம்மை சிறப்பும்மை. முன்னி - நினைந்து. மின் - ஒளி. `இழைபுனை` என இயையும். புனைதல் - அணிதல். இழை - அணி. மன் - வேந்தன். குறி - அடையாளம். காட்டுதல் - கோடுகுறித்தல், சங்குகுறித்தல் முதலியன. |
(188) |
திருமகட் புணர்ந்தவன் சேறல்: |
| இருங்குன் றனமதி லெம்பதிக் கேக லெளிதுசெம்மை தருங்குங் குமமுலைத் தையல்நல் லாய்தஞ்சை வாணன்வெற்பில் கருங்குஞ் சரஇனம் வெண்சிங்க ஏறஞ்சுங் கங்குலினெம் மருங்குஞ் சுடர்விளக் காமட வார்குழை மாணிக்கமே.
|
(இ-ள்.) சிவப்பு நிறத்தைத் தருங் குங்கும மணிந்த முலையை யுடைய தையனல்லாய்! தஞ்சைவாணன் வெற்பில் கரிய யானைக்கூட்டங்கள் வெண்சிங்க ஏற்றை யஞ்சுங் கங்குலில் எட்டுத் திக்கும் மடவாரது குழையி லணிந்த மாணிக்கம் ஒளி பொருந்திய விளக்கேற்றினாற் போல வருமாதலால், பெரிய மலைபோலும் மதில்சூழ்ந்த எம்பதிக்கு ஏகல் எளிது; நீ கவலற்க என்றவாறு.
|
எனவே, தலைவி என் நெஞ்சிலிருக்கின்ற ளாதலின், அவள் குழை மாணிக்க வொளியினால் இருள் நீங்கு மென்றவாறாயிற்று.
|
இருமை - பெருமை. குஞ்சரம் - யானை. சுடர் - ஒளி. குழை - காதணி. `சிங்கஏறு` என்புழி இரண்டனுருபு தொக்கது.
|
இறையோ னிருட்குறி வேண்டலும், நெறியி னெளிமை கூறுதலும், தலைமகனவணாட் டணியியல் வினாதலும், பாங்கி இறைவிக்கு இறையோன் குறையறிவுறுத்தலும் ஆகிய நான்கும் வேண்டற்குரியன.
|
பாங்கி நெறியன தருமை கூறலும், இறைமகள் இறைவனைக் குறிவரல் விலக்கலும், பாங்கி இறைவனை வரவு விலக்கலும், ஆகிய மூன்றும் மறுத்தற்குரியன.
|
பாங்கி நெறியின தருமை கூறலும், இறைமகள் இறைவனைக் குறிவரல் விலக்கலும், பாங்கி இறைவனை வரவு விலக்கலும், ஆகிய மூன்றும் உடன்படற்குரியன.
|
தலைமகள் நேர்ந்தமை பாங்கி தலைவற் குணர்த்தலும், குறியிடை நிறீஇத்தாய் துயிலறிதலும், இறைவிக்கு இறைவன் வரவறி வுறுத்தலும், |