கட
173
இரவுக்குறி இடையீடு

 
     எனவே, நாம்  கருதாத  அடையாளத்தை  நமக்கறிவித்துத்  தாம்  அக்குறி
வாராதொழிந்தாரென்று தலைவன் தீங்கு கூறியவாறென்று உணர்க.

     வடி - மாவடு. அடையலர் - பகைவர். தொடி - வளை.  பணை - மூங்கில்.
குறித்தல் - கருதுதல்.
(192)    
தலைவன் புலந்து போதல்:
     தலைவன் புலந்து போதல் என்பது,  தலைவன் தான் குறித்த குறியிலிருந்து
தலைவி அல்லகுறிப்பட்டு வாராமையாற் புலந்து தன் ஊர்க்குப் போதல்.

  தேனுற்ற வாகையந் தார்த்தஞ்சை வாணனைச் சேரலர்போல்
மானுற்ற பார்வை மயில்பொருட் டாக வழிதெரியாக்
கானுற்ற கானற் கனையிருள் வாய்வரக் கற்பித்தநீ
யானுற்ற நோய்களெல் லாம்படு வாயினி யென்னெஞ்சமே.

     (இ-ள்.) எனது நெஞ்சமே!    தேன்பொருந்திய    வாகையந்தா    ரணிந்த
தஞ்சைவாணனைச்  சேராதவர்கள்  போல,  மான்போலுற்ற  பார்வையினையுடைய
மயில் பொருட்டாக  வழி தெரியாத காடு  போலப் பொருந்திய  சோலையிடத்திற்
செறிந்த இருளிலே  வரக்  கற்பித்த  நீ  யான்  உற்ற  நோய்களெல்லாம்  இன்று
படுவாயாக என்றவாறு.

     வாகையந்தார் - வெற்றிமாலை.   சேரலர் - பகைவர்.   `மானுற்ற பார்வை`
`கானுற்ற கானல்`  இரண்டும்  உவம வாசகம். ஈங்கு, `உற்ற`  என்பதற்கு `வம்பறா
வென்று  செப்புற்ற  தோர்பகை`  என்பதனை  உதாரணங்  காட்டுவாரும்  உளர்.
மயில் : ஆகுபெயர். கானல் - சோலை. கனையிருள் - செறிந்தவிருள்.

     இவ்வாறு புலந்துபோம் தலைவன் தான் வந்து குறியிடத்து நின்றுபோயதற்கு
அடையாளமாகத் தன் மாலையைத் தாழை  மேல வைத்துப் போயினான்  என்பது
மேல்வருஞ் செய்யுளிற் றோற்றிய தென்பது.
(193)    
இத்துணையும் எட்டாநாட் செய்தியென் றுணர்க.
புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கல்:
     புலர்ந்தபின் வறுங்களந்  தலைவிகண்டு  இரங்கல் என்பது,  ஒன்பதா நாள்
இருள்புலர்ந்த பின் தலைவி வறுங்களங் கண்டு இரங்கல்.

  தாதகை தண்டலை சூழ்தஞ்சை வாணன் தடந்துறைவாய்
நீதகை கொண்டென்முன் னின்றனை யேசெந் நிறக்கனிவாய்
மேதகு முள்ளெயிற் றொண்முகைக் கொங்கைவெண் தோட்டு மென்பூம்
கேதகை யென்னுநல் லாய்கொண்கர் மாலை கிடைத்ததென்றே.

      (இ-ள்.) இடி யதிருந்தொறும் மிகுந்த மயிரைச் சிலிர்த்து  யானையைத்தேடி
யியங்குஞ் சிங்கவேறு வாய்விடும் பெரிய