கட
தஞ்சைவாணன் கோவை
174

 
     (இ-ள்.) தாது   செறிந்த   சோலைசூழ்ந்த    தஞ்சைவாணனது    பெரிய
வையைத்   துறையிடத்துச்  சிவந்த  நிறத்தையுடைய    கனியாகிய   வாயையும்,
மேம்பாடுள்ள முள்ளாகிய   எயிற்றையும், ஒள்ளிய  முகையாகிய கொங்கையையும்,
வெண்மைநிறம்  பொருந்திய  தோட்டையும்  உடைய  மெல்லிய    பொலிவாகிய
கேதகை  யென்னும்  பெண்ணே!  நினக்குத்  தலைவர்   சூட்டிய   கழுநீர்மாலை கிடைத்ததென்று  நீ யழகு  கொண்டு என்முன்  நின்றனை  யாதலால்,  நல்வினை
செய்தாய் என்றவாறு.

    கேதகையைப்    பெண்ணென்று     கூறிவதனாற்    கேதகையுறுப்பெல்லாம்
பெண்ணுறுப்பாகக் கூறியவாறு காண்க.

    அகைதல் - செறிதல்.   தண்டலை - சோலை.   தகை - அழகு.   மேதகு -
மேம்பாடு. தோடு - இதழ். கேதகை - தாழை. கொண்கர் - தலைவர்.  `தலைமகள்
அவலம்  பாங்கி  தணித்தல்   `என்னுங்   கிளவிச் செய்யுளில்  கழுநீர்   மாலை
கூறியவதனால்,  ஈண்டுக்  கூறிய மாலை  கழுநீர்மாலை யென்று   அறியப்பட்டது.
`ஆதலால் நீ நல்வினை செய்தாய்` என்பது சொல்லெச்சம்.
(194)    
தலைவி தன்றுணைக் குரைத்தல்:
  1வரலிங் கரிய மயங்கிருள் யாமத்து வந்தினவேய்
நாலுஞ் சிலம்பர் நவமணி யாழி நறவுண்வண்டு
முரலுந் துளையவிழ் மொய்ம்மலர்க் காந்தளஞ் செம்மலர்க்கை
விரலென்று கொல்செறிந் தார்நெறித் தாழ்குழல் மெல்லியலே.
(இது பிறசெய்யுட்கவி)

     இதற்கு  இந்நூலிற்  கவியில்லை.  என்னை  பாடாதொழிந்த  தோவெனின்,
அன்று செய்யுட்பாடி  நெடுங்காதலமாதலால் முறையெழுதுவார் விட்டதும்,  ஏட்டிற்
பழுதினா   லிறந்தது  மாயிற்று.  முன்னர்  வருங் கிளவிகட்குச்  சில இடங்களில்
செய்யுட்களில்லா மைக்கும் இவ்வுரைப்படி கண்டுகொள்க.
(195)    
தலைமகள் அவலம் பாங்கி தணித்தல்:
     தலைமகள்  அவலம் பாங்கி தணித்தல் என்பது, தலைமகளது  துன்பத்தைப்
பாங்கி தணித்துக் கூறல்.

  பொய்யா தவர்தங் குறிபிழை யாரவர் பூண்டவன்பு
மெய்யாதல் தேறி யழுங்கன்மின் னேபுய வெற்பிரண்டால்
மையாழி வைய நிலையிட்ட வாணன்தென் மாறைவெற்பின்
உய்யான மென்கழு நீர்நறு மாலை யுடைத்தல்லவே.


1. அம்பிகாபதி கோவை - 198.