|
|
(இ-ள்.) பெருந்திருமாது தாமரை மலரை நீக்கினவளாகி இந்தப் பழைய மலைமேல் வந்துபிற்நதன ளாகுமென்று உலகஞ்சொல்லப் பெண்களிற் சிறந்தனளாதலின், செந்தமிழ் வாணன் தென்மாறை போன்றவள் மறந்தனளாயினும், யாம் ஒருபோதும் மறந்திலம் என்றவாறு.
|
அம்போருகம் - தாமரை. வரை - மலை. என - என்று சொல்ல பேதையர் - பெண்கள். போது - நாள். |
(198) |
அவள் குறிமருண்டமை யவளவற் கியம்பல்: |
அவள் குறிமருண்டமை அவள் அவற்கு இயம்பல் என்பது தலைவி குறிமயங்கியது பாங்கி தலைவற்கு உணர்த்தல்.
|
| தனையா வரும்புக ழத்தரும் வாணன் தமிழ்த்தஞ்சைமான் அனையா ளவள்குறி யாமிதென் றேநினைந் தல்லதொன்று நினையா வருங்கங்குல் நின்குறி யாவந்து நின்றதுநம் விளையால் விளைந்ததென் றேவெறி தேயன்ப மீண்டனளே. |
(இ-ள்.) அன்பனே! தன்னை யாவரும் புகழக்கொடுக்கும் வாணன் தமிழ்த்தஞ்சை மான்போன்றவளாகிய அத்தலைவி இது குறியாமென்று நினைந்து வருங்கங்குலிடத்து நீ நினையாவல்ல தொருகுறி நின்குறியாய் வந்த நேர்பட நின்றது, நாம் முன்செய்த தீவினையால் விளைந்ததென்று பயனன்றி மீண்டனள ்என்றவாறு. |
`இதுகுறியாம்` எனவும், `நினைந்து வருங் கங்குல்` எனவும் `நினையா வல்ல தொன்று` எனவும் மாறுக. கங்குல் - இரா. வெறிதே - பயனின்றியே. அன்ப என்பது அண்மை விளி. |
(199) |
அவன்மொழிக் கொடுமைசென் றவளவட் கியம்பல்: |
அவன்மொழிக் கொடுமைசென்று அவள் அவட்கு இயம்பல் என்பது, தலைவன் சொல்லிய கொடுமையைத் தோழி தலைமகட்குச் சொல்லல்.
|
| பல்லியம் போலுரு மேறெங்கும் ஆர்ப்பதும் பார்ப்பதின்றி வல்லியம் பேர்தகம் போர்பயில் கான்வந்து வாணன்தஞ்சை அல்லியம் பொருகை யன்னநின் கேளரு ளாசையினின் றெல்லியம் போதுசென் றேனென்று கேள்வர் இயம்பினரே.
|
(இ-ள்.) போர்புரிவோர் முரசுபோல் இடியெவ்விடத்தும் ஆரவாரிப்பதையுங் கருதுதலின்றிப் புலியும் யானையும் போர் நெருங்கிச் செய்யுங் காட்டில்வந்து, வாணன் தஞ்சை நகரிலுள்ளவர் அகவிதழையுடைய அம்போருகத்தை யுடையவளாகிய திருமகளையொத்த நினது உறவுதரும் |