கட
177
இரவுக்குறி இடையீடு

 
     பல்லியம் - முரசு. உருமேறு - இடி. பார்ப்பது - கருதுவது. வல்லியம் - புலி.
போதகம் - யானை. கான் - காடு. அல்லி - அகவிதழ். அம்போருகை - திருமகள்.
கேள் - உறவு.      அருளாசை - தருமாசை.      நின்று - குறியிடத்து  நின்று.
எல்லியம்போது - இராப்போது. கேள்வர். கொண்கர்.
(200)    
என்பிழைப் பன்றென்று இறைவி நோதல்:
     என்பிழைப்பு  அன்றென்று   இறைவி  நோதல்  என்பது   குறிபிழைத்தது
என்பிழை யன்றென்று இறைவி நொந்து கூறல்.

  வியலூ ரெயிற்புற நொச்சியி னூழ்மலர் வீழ்தொறெண்ணி
மயலூர் மனத்தொடு வைகினன் யான்தஞ்சை வாணன்வெற்பர்
புயலூ ரிருட்கங்குல் வந்தவ மேநின்று போயின்ரென்
றயலூர் நகைக்குமென் னேயென்ன பாவங்கொ லாக்கினவே.

     (இ-ள்.) அகலம்   பரந்த   மதிற்புறத்து  நொச்சிமரத்தினது   பழையமலர்
சரசரத்து   வீழ்தோறும்  வீழ்தோறும்  தலைவர்  வருகின்றார்  என்னும்  ஆசை
செல்லு  மனத்தோடு  யான்  இருந்தேன்; தஞ்சைவாணனது  வெற்பிலுள்ளாராகிய
தலைவர் புயல்கள் செல்லும் இருளில் வந்து பயனின்றியே நின்ற மீண்டு போயினர்
என்று அயலூர் அறியில் நகைக்குமாதலால், இவ்வாறு ஆக்கியது என்ன பாவமோ,
செய்யுமாறு என்னே என்றவாறு.

     வியல் - அகலம். ஊர்தல் - பரத்தல். எயில் - மதில்.  ஊழ்மலர் - பழைய
மலர்.   மயல் - ஆசை.   ஊர்தல்   இரண்டும்  செல்லுதல்.  என்னே   என்பது
இகழ்ச்சியான்   வந்தது.  `அயலூர் நகைக்கும்`    எனவே    இகழ்ச்சி   பிறந்து
அவ்விகழ்ச்சிக்கண், `என்னே` என்று இழிவு தோன்றியவாறு உணர்க.
(201)    
இத்துணையும் பகற்செய்தியென்று உணர்க.
அல்லகுறி முற்றிற்று.