|
|
வருந்தொழிற்கருமை |
தாய் துஞ்சாமை: |
| ஆழிய கன்புவி யுள்ளன யாவு மடங்கிநள்ளென் றூழிமு டிந்தன வோங்கிருள் யாமத்து மோடையினும் தாழியி னும்போ தலர்தஞ்சை வாணன் தரியலர்போல் தோழிநம் மன்னைகண் ணேதுயில் கோடல் துறந்தனவே.
|
(இ-ள்.) தோழியே! கடல்சூழ்ந்து அகன்ற புவியிலுள்ளன யாவும் அடங்கி நள்ளென்னும் ஒசையோடே கூடி யுகமுடிவு காலம்போன்று இருள் வளரப்பட்ட யாமத்தும் ஓடையிடத்தும் தாழியிடத்தும் போதுகள் அலருந் தஞ்சைவாணன் தரியலர் போல் நம் அன்னை கண்டுயில் கொள்ளுதலைத் துறந்தனள் என்றவாறு. |
ஆழி - கடல். நள்ளென்னு மோசை - அனுகரணவோசை ஊழி - யாகம். யாமம் - இரவு. தாழி - சால். |
(202) |
நாய் துஞ்சாமை: |
நாய் துஞ்சாமை என்பது, தாய்துஞ்சியபின் ஊரிலிருக்கும் நாய் துஞ்சாமை. |
| தண்ணென் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல் பெண்ணென் பிறவியும் பேருடைத் தன்றிப் பெரும்பதிநங் கண்ணென் பவர்வரக் கங்குலின் ஞானிக் கணங்குரைத்துத் துண்ணென் கடுங்குரல் வாயன்னை துஞ்சிலும் துங்கிலவே.
|
(இ-ள்.) குளிரென்னும் புனலையுடைய வைகை சூழ்ந்த தஞ்சைவாணன் தரியலர்போல் பெண்ணென்று சொல்லும் பிறவியும் கீர்த்தியுடைத்தன்று; இப்பெலுடதபதியிடத்து நம் கண்ணென்று சொல்லப்பட்ட தலைவர்கங்குலில் வர நம் அன்னை துஞ்சினும், துண் என்று சொல்லும் கடிய குரலெழும் வாயையுடைய ஞாளிக்கூட்டங் குரைத்துத் துஞ்சில என்றவாறு.
|
பாங்கி: முன்னிலை யெச்சம். தரியலர் - பகைவர். பேர் - கீர்த்தி. பெரும்பதி. என்புழி ஏழனுருபுதொக்கது. ஞாளிக்கணம் - நாய்க்கூட்டம். `துண்ணென் கடுங்குரல்வாய் ஞாளிக்கணம்` என இயையும். துண் என்பது அச்சக்குறிப்பு. துஞ்சினும் என்னும் உம்மை, துஞ்சுதல் அரிதென்பது தோன்றநின்றது. |
(203) |