கட
179
இரவுக்குறி இடையீடு

 
ஊர் துஞ்சாமை:
     ஊர் துஞ்சாமை என்பது,   நாய் துஞ்சினும்,  ஊரிலுள்ளார் துஞ்சாதிருத்தல்;
இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்து மேல்நின்றது.

  ஒங்கண்ணல் வெம்பக 1டுந்திவந் தோரை உடன்றுதுபைத்
தேங்கண்ணி சூடிச் செருவென்ற வாணன்தென் மாறைமின்னே
தாங்கண் ணனையர் தமைப்பிரிந் தோநந் தனிமைகண்டோ
நாங்கண் ணுறங்கினு மோவுறங்2கார்கண் நகரவரே.

     (இ-ள்.) உயர்ந்த பெருமையுடைய வெவ்விய யானைப் பகட்டை நடத்திவந்த
பகைவரைச்   சினந்து,  தும்பையென்னுந்  தேன்பொருந்திய  மாலையைச்  சூடிப்
போரைவென்ற வாணன் தென்மாறை நாட்டு மின்போன்றவளே! தாம் கண்போன்ற
நாயகரைப் பிரிந்தோ,  அன்றி நமது தனிமை  கண்டோ,   நாம் கண்ணுறங்கினும்
கண்ணுறங்கார் நகரவர் என்றவாறு.

     அண்ணல் - பெருமை. பகடு - யானை. உந்தல் - நடத்துதல்.  உடலுதல் -
சினத்தல்.  போர்  பொருவோர் தும்பைமாலை  சூடுதல்  புறப்பொரு   ளிலக்கண
வழக்கு. தேங்கண்ணி - தேன்பொருந்திய மாலை. செரு - போர்.
(204)    
காவலர் கடுகுதல்:
     காவலர் கடுகுதல் என்பது, நகர்காப்போர் துடியடித்துக் கொண்டு ஊர்சுற்றிக்
கடுகி வருதல்.

  புயற்கண் ணியதலைப் பூகமென் பாளைப் புதுமதுநீர்
வயற்கண் ணிறைதஞ்சை வாணன்தென் மாறையில் வஞ்சியன்னாள்
கயற்கண் ணிணையஞ்சி நீர்மல்கக் காவலர் கைப்பறையின்
செயற்கண் ணிணையல்ல வோபடு கின்றன திண்கடிப்பே.

     (இ-ள்.) முகிலைக்கிட்டிய  தலையினையுடைய பூத்தினது மெல்லிய  பாளைப்
புதிய  மதுநீர்  வயற்கண் நிறையுந்  தஞ்சை  வாணன்  தென்மாறையில்  வஞ்சிக்
கொம்புபோல்  வாளது  கயல்  போன்ற கண்ணினை யஞ்சி நீர்  நிறையவல்லவோ
காவலரது கைப்பறையின்  செயல் பொருந்திய கண்ணினையின் திண்ணிய கடிப்புப்
படுகின்றன என்றவாறு.

     அண்ணிய - கிட்டிய. தலை - கமுகினது உச்சி. பூகம் - கமுகு. பறை - துடி.
கண்ணினை - இருபக்கம். கடிப்பு - அடிக்குங் குறுங்கோல். ஓகாரம்: எதிர்மறை.

(பாடம்). 1. டூர்ந்துவந்தா. 2. காரிந் நகரவரே.