|
|
உரைப்போர் கேட்போர் இன்மையின் கவிக்கூற்றாய துறை: `வருந்தொழிற்கருமை` கூறுங் கிளவி ஏழினுள்ளும் ஆறு கிளவியும் தலைவி கூற்றாய்க்கூறி, `இது கவிக்கூற்றாய்க் கூறியது என்னையெனின், அயன்மாக்கள் தன்மையைக் கற்புடைமகளிர் கூறுவது இயல்பன்றாகலின், அவர் கூறாரென்னும் ஒழுக்கம் பற்றிக் கவிக்கூற்றாக் கூறியதென் றுணர்க. இக்கருத்தா னன்றே, `ஊர் துஞ்சாமை` என்னுங் கிழவிச் செய்யுளில், `தாம் கண்ணனை யர் தமைப்பிரிந்தோர்` என ஆடவரை நீக்கி மடவார் செயலாய்க் கூறியதூஉம் என்றுணர்க. |
| 1`அடிக்கண் ணதிருங் கழலரி கேசரி தெவ்வனுங்கக் கொடிக்கண் ணிடியுரு மேந்திய தென்னவன் கூடலன்னாய்! வடிக்கண் ணிரண்டும் வளநகர் காக்கும்வை வேலிளைஞர் துடிக்கண் ணிரண்டுங்கங் குற்றலையொன்றுந் துயின்றிலவே`
|
என இறையனார் அகப்பொருள் உரையிற் காட்டியவதனானும் உணர்க. |
(205) |
நிலவு வெளிப்படுதல்: |
நிலவு வெளிப்படுதல் என்பது, தலைவன் வருதற்கு இடையூறாய் நிலவு வெளிப்படுதல்.
|
| தெண்பாற் கதிர்மூத்த வெண்ணகை யாய்திகி ரிக்கிரிசூழ் மண்பாற் புகழ்வைத்த வாணன்தென் மாறைநம் மன்னர்பொற்றேர் பண்பாற் பரிக்கும் பரிவரு மாறென் பரந்தநிலா வெண்பாற் கடலின்வை யம்பதி னாலு மிதக்கின்றவே.
|
(இ-ள்.) தெளிவாய்ப் பால்போன்ற கதிரையுடைய முத்தம் போன்ற வெள்ளிய நகையையுடையாய்! பரந்த நிலவாகிய வெண்பாற்கடலின் உலகம பதினாலு மிதவா நின்றன; ஆதலாற் சக்கரவாளகிரி சூழ்ந்த புவியிடத்துப் புகழை வைத்த வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் நம் மன்னரது பொற்றேரைக ்குணத்தினாற் பரிக்கும் பரிகள் வருமாறு எப்படி? என்றவாறு. |
திகிரிக்கிரி - சக்கர வாளம். பண்பு - குணம். பரித்தல் - சுமத்தல். பரி - குதிரை. வையம் என்பது தேர்க்கும் பேராதலின், முன் பதினாலு தேர்மீது நின்றன கண்டு நம்மன்னர் பொற்றேர் பரிக்கும் பரி வருமாறு என் என ஒரு பொருள் தோன்றியது காண்க.
|
நிலவு வெளிப்படுதல் பதினாலு நாழிகைக்குமேற் கூறுவதென்னெனின் மதித்திங்களும் பிறைத்திங்களும் தம்மிற் கலக்கின்ற நாள் அப்பதினைந்தில் இதுமதித்திங்களாதலால் இம்மதித்திங்கட்கு முற்கூறும் பிறைத்திங்கட்குப் |
|
1. இறையனார் அகப்பொருள் - 30. |