|
|
பிற்கூறும் களவில் இரவுக் குறிக்கு உரித்தாகலானும் மற்றைத்தினம் அட்டமிப் பக்கமாகலானும் என்று உணர்க.
|
| 1`திங்க ளிரண்டி னகமென மொழிப` |
என்னும் இறையனார் அகப்பொருட் சூத்திர வுரையா னுணர்க. |
(206) |
கூகைகுழறுதல்: |
கூகை குழறுதல் என்பது, கூகை குழறக் கேட்ட தலைவி அஞ்சிக் கூறுதல். |
| நம்பே றுடைமை யிருக்கின்ற வாகடல் ஞாலத்துள்ளோர் தம்பே றெனவந்த சந்திர வாணன் தரியலர்போல் வம்பேறு கொங்கை மயிலிய னாமஞ்ச மன்றமராங் கொம்பேறி நள்ளிருள் வாய்க்குழ றாநின்ற கூகைகளே.
|
(இ-ள்.) கச்சேறி யிருக்கப்பட்ட கொங்கையையுடைய மயில் போன்ற இயலையுடையாய்! கடல்சூழ்ந்த வுலகத்துள்ளோர் தம் தவப்பேறாய் வந்த சந்திரவாணன் தரியலர்போல நாம் அஞ்சத்தக்கதாக வெளியிலிருக்கும் மராமரத்தின் கினையிலேறி இடையிருளின்கண்ணே கூகைகள் குழறாநின்றன; நமது நல்வினைப்பேறு இருக்கின்றவாறு நன்றாயிருந்தது என்றவாறு.
|
பேறு இரண்டும், நல்வினைப்பேறு. வம்பு - கச்சு. மன்றம் - வெளி. நள்ளிருள் - இடையாமம். `நன்றாயிருந்தது` என்னுஞ் சொல் வருவித்துரைக்கப்பட்டது. குறிப்புமொழியதனாற் றீதாயிருந்தவென்பது பெறப்பட்டது. மயிலியல் : அன்மொழித் தொகை; அண்மைவிளி. மராங்கொம்பு - ஆச்சாக்கொம்பு. |
(207) |
கோழி குரல் காட்டுதல்: |
கோழிகுரல் காட்டுதல் என்பது இருவர்க்கும் இடையூறாய்க் கோழி குரல் காட்டுதல்.
|
| மன்பதை யுய்ய வருந்தஞ்சை வாணன்தென் மாறைவெற்பர் கொன்பதி வேல்வலங் கொண்டுவந் தால்தங்கள் கோனடைந்தான் என்பதுதேறி யிடையிரு ளூரை யெழுப்பும் வெம்முள் பொன்பதி தாள்வளை வாய்ச்செய்ய சூட்டுவன் புள்ளினமே.
|
(இ-ள்.) மக்கட்பரப்பு உய்யும்படி வரும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பர் அச்சம் பதிந்த வேலை வலங் கையிற் கொண்டு வந்தால், |
1. இறையனார் அகப்பொருள் - 32. |