கட
தஞ்சைவாணன் கோவை
186

 
    (இ-ள்.) அறல்போல்  இருள்கூர்ந்து   கடைகுழன்று  ஆர்ந்த   குழலையும்
பிறைபோன்ற  வாணுதலையும்  உடையாய்!  கூடாத  விரகமும்,  கழியாத இரவும்,
நெருங்கிய  முலைமேற்  கொன்றைப்  பூங்கொத்து  வைத்தாற்போன்ற   பசப்பும்,
ஒழிந்த  துன்பங்களும்  இவையெலாம்  தஞ்சைவாணன் வெற்பர் அறியாதிருப்பது
வேறொன்றும்  அல்ல;   நம்   ஊழ்வினையாதலால்   அவர்மேற்   குறையின்று
என்றவாறு.

புணர்தல் - கூடுதல்.  புணர்தல் - நெருங்குதல்.  இணர் - பூங்கொத்து;   பசப்புப்
பொன்னிற  மாதலால்  கொன்றை  என  வருவித்தது.   வணர் - கடை குழன்றல்.
உணர்தல் - அறிதல். ஊழ்வினை - பழவினை.
(214)    
இத்துணையும் பத்தாநாட் செய்தியென் றுணர்க.
கனவு நலிபுரைத்தல்:
    கனவு   நலிபு  உரைத்தல்   என்பது   தலைவன்   கனவிற்   கூடினானாக.
விழித்தபின்பு  பொய்யாய்ப்போன  துன்பத்தைப் பதினொன்றாநாள்
  பாங்கியுடன்
தலைவி கூறல்.

  இல்லா வருந்துயி லுண்டா யவரும்வந் தெய்திற்கங்குல்
பொல்லாத சேவற் கடுங்குர லார்த்துப் புவிபுரக்கும்
மல்லார் புயன்தமிழ் வாணன்தென் மாறை மருவலர்போல்
அல்லாமை நெஞ்சத் தடுமாற நல்லிடை யாக்கியதே.

    (இ-ள்.) பிரிவில்  இல்லா  அருந்துயிலு   முண்டாய   வரும்  வந்தெய்தின்,
கங்குலில்  பொல்லாமையாகிய  கோழி,  கொடிய  குரலை   யார்த்துப்
 புவியைக்
காக்கும்  மற்றொழிலார்ந்த  புயத்தையுடைய
 தமிழைக் கற்ற வாணன் தென்மாறை
நாட்டைச்  சேராதார்போல,  நன்கல்லாத  என்  நெஞ்சம்  தடுமாற்றமாக
  நல்ல இடையூறாக்கியது என்றவாறு.

தலைவன்  பிரிந்தகாலை  துயில்  அரிதாதலால்,  `இல்லா வருந்துயில்`   என்றும்,
தலைவன்    வந்தெய்தல்     அரிதாதலால்,  `அவரும் வந்தெய்தில்`   என்றும்,
இன்பத்தைக்  கெடுத்துத்  துயிலெழுப்பலால், `பொல்லாத சேவல்` என்றும். மிகுந்த
துன்பத்தைக்  கொடுத்தலின்,  `நல்லிடை`  என்றும்  கூறியவாறு. துயிலும் என்னும்
எதிரது தழீஇய எச்சவும்மை விகாரத்தாற் றொக்கது.

பாங்கி:  முன்னிலையெச்சம்.  இது,  `கனவொடு மயங்கல்`  என்னும்  மெய்ப்பாடு.
(215)