|
|
கவினழிபுரைத்தல்: |
கவின் அழிபு உரைத்தல் என்பது, விரகத்தால் தலைவி தன் நலனழிந்ததனைப் பாங்கியொடு கூறல்.
|
| வாளினு நீள்விழி வாணுக லாய்தஞ்சை வாணன்தெவ்வின்1 நாளினு நாளு நலந்தொலை வேனகை யாரயில்வேல் வேனினு மேர்நல்ல வெற்பனு நீயுமென் மேனியினும் தோளினு நோயறி யீரறி யாததென் தொல்வினையே.
|
(இ-ள்.) வாளினும் நீண்ட விழியையும் ஒளிபொருந்திய நுதலையும் உடையாய், தஞ்சைவாணனது பகையைப் போலச் சென்ற நாளினும் வருநாள் மிகவும் நலனழி தலையுடைய எனது மேனியினும் தோளினும் உற்ற வேட்கைநோயை, ஒளியார்ந்த கூர்வேலையும் வேளினுமிக்க அழகையும் உடைய வெற்பனும் நீயும் அறிதல் செய்யீர்; நீர் அறிதல் செய்யாதது யாதெனின் என் பழவினை என்றவாறு.
|
`நலந்தொலைவேன் மேனியினும்` எனவும், `நோய் நகையா ரயில்வேல்` எனவும், `நீயுமறியீர்` எனவும் மாறுக. நோய் என்புரி இரண்டனுருபு தொக்கது. `தோளினுநோயறிவீர்` என்று பாட மோதுவாருமுளர்.
|
தெவ் - பகை. நகை - ஒளி. அயில் - கூர்மை. தொல்வினை - பழவினை. நாளும் என்புழி உம்மை அசைநிலை. |
(216) |
தன்துயர் தலைவற் குணர்த்தல் வேண்டல்: |
தன் துயர் தலைவற்கு உணர்த்தல் வேண்டல் என்பது, தலைவிதன் துயரைத் தலைவற்கு அறிவிக்கவேண்டும் என்று பாங்கியொடு கூறல். |
| வரைப்பால் மதுரத் தமிழ்தெரி வாணன்தென் மாறைவையை நுரைப்பால் முகந்தன்ன நுண்டுகி லாயிந்த நோயவர்க்கின் றுரைப்பா ருளரே லுயிரெய்த லாநமக் கூர்திரைசூழ் தரைப்பால் வளரும் புகழெய்த லாமவர் தங்களுக்கே.
|
(இ-ள்.) பொதியவரைவிடத்துப் பிறந்த மதுரமாகிய தமிழை ஆராய்ந்த வாணன் தென்மாறையைச் சூழ்ந்து வரும் வையை யாற்றின் நுரையையும் பாலையும் முகந்துகொண்டாலொத்த நுண்ணிய நூலாற்செய்த |
|
1. அகப்பொருள் விளக்கத்தில் இச்செய்யுட்கு மாறாக, |
| `சினவாகை சூடிச் செருவென்ற வாணன்தென் மாறையினம் மனவாழ் வனையவர் வநதுநல் யாம மணந்ததெல்லாம் நனவா மெனவே மகிழ்ந்தேன் விழித்தொன்று நான்கண்டிலேன் கனவாய் முடிந்தது பின்னையென் னேயென்ன கைதவமே` |
என்னும் செய்யுள் காணப்படுகிறது. |