கட
தஞ்சைவாணன் கோவை
190

 
இக்கிளவிச் செய்யுள் ஆங்கு,  `நெஞ்சழிதல்`  என்னும் மெய்ப்பாடென்று உணர்க.
(221)    
தன்னுட் கையா றெய்திடு கிளவி:
தன்னுட் கையா  றெய்திடு  கிளவி  என்பது,  தலைவி தன்னிடத்துத் துன்பத்தைப்
பிறிதொன்றன்மே லிட்டுச் சொல்லுஞ் சொல்.

  1விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல் லாமங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே.
    (இதுவும் புறசெய்யுட் கவி)

இக்கிளவிச்   செய்யுள்   எம்  மெய்யாயினும்   `ஒப்புமை  கோடல்`    என்னும்
மெய்ப்பாடென்று உணர்க. 2`இன்பத்தை வெறுத்தல்` என்னுஞ் சூத்திரத்திற் காண்க.
(222)    
நெறி விலக்குவித்தல்:
     நெறிவிலக்குவித்தல்    என்பது,  தலைவி   தலைவன்   வரும்   வழியை
விலக்கெனப் பாங்கியொடு கூறல்.

ஏவற்கருத்தா,  இயற்றுங் கருத்தா,  கருவிகருத்தா,  கரும கருத்தா எனக் கருத்தா
நால்வகையாய்க்  கூறப்படும். அவற்றுள்  பாங்கியை   இயற்றுங்   கருத்தாவாக்கி,
தலைவியை ஏவுங்கருத்தாவாய்க் கூறலின், `நெறிவிலக்கல்` என்னாது, `நெறிவிலக்கு
வித்தல்` எனக் கூறியதென்று உணர்க. இவ்வாறே மேல்வரும், `குறிவிலக்கு வித்தல்`
முதலாயினவற்றிற்குங் கொள்க.

  ஈன்றா னினுமெனக் கண்புடை யாய்சென் றிரந்துகொண்டு
சான்றாண்மை யன்பர் தமக்குரை நீதஞ்சை காவலனைத்
தேன்றாழ் வரைத்தமிழ் சேர்த்திய வாணனைச் சேரலர்க்கும்
தோன்றா விருங்கங்குல் நீவரு மாறொழி தோன்றலென்றே.

     (இ-ள்.) ஈன்ற  தாய்  அன்பினும்  என்னிடத்து  அன்பு  மிக்குடை  யாய்!
தஞ்சை  காவலனைத்   தேன்றாழ்ந்த   பொதியமலையில்  தமிழைச்   சேர்த்திய
வாணனைச் சேராத  பகைவர்க்குந் தோன்றாத பெரிய கங்குலிடத்துத் தோன்றலே!
வரும் வழியையொழி யென்று மாட்சிமையுடைய  அன்பர்க்கு நீ சென்று வேண்டிக் கொண்டு உரைப்பாயாக என்றவாறு.

     உம்மை: சிறப்பும்மை. எனக்கு என்புழி வேற்றுமை மயக்கம். சான்றாண்மை -
மாட்சிமை. தாழ்தல் - தங்குதல். வரை - பொதிய வரை.

1. கோவையார் - 177.      2. தொல். மெய்ப்பாட்டியல் - 22.