|
|
அகணப்புட்கள் தங்கு நாடர் எனக்கருளினால் முன்னாளருளியநோயைத் தணிக்கும் பொருட்டாக, இன்று அன்னை மின்னாதிடித்தது போலக் காரணமின்றி வெறியாட்டாளனை வினாவ உட்கொண்டாளென்று அன்பர்க்கு உரைத்து வரவு விலக்குவாயாக என்றவாறு.
|
வெறி - வெறியாட்டாளனை வினாதல். விந்தை மங்கை - வெற்றி மாது. மன்னாண்மை - அரசாண்மை. வண்டு, யாழ் இரண்டும் ஆகுபெயர். இறைகொள்ளுதல் - தங்குதல். நோய் - வேட்கை நோய். தணிப் பான்: வினையெச்சம். மொய்குழல் - வண்டு மொய்க்குங் குழல். |
(225) |
பிறர் வரைவு விலக்குவித்தல்: |
பிறர் வரைவு விலக்குவித்தல் என்பது, தலைவி பிறர் வரைவைத் தலைவர்க்குக் கூறி வரவைு விலக்கெனப் பாங்கியொடு கூறல்.
|
| பொருபால் மதியினைப் போன்மருப் பியானையிற் பொன்னொடின்பம் தருபால் மொழிவஞ்சி சாரவந் தார்தஞ்சை வாணன்வெற்பின் ஒருபால் நொதுமல ரென்னவெந் தீயுலை யுற்றசெவ்வேல் இருபால் மருங்கினுங் கொண்டெறிந் தாலொத்த தென்செவிக்கே. |
(இ-ள்.) இன்பத்தைக் கொடுக்கும் பால்போலும் மொழியை யுடைய வஞ்சிக்கொம்பு போல்வாய்! தஞ்சைவாணன் வெற்பில் பொரப்பட்ட வெண்மதியை யொக்கும் மருப்பையுடைய யானை யின்மேல் பொன்னொடு ஓரிடத்தயலார் சாரவந்தாரென்று சொல்ல, அச்சொல் என் செவிக்கு வெய்ய தீயுலையிற் பழுக்கக் காய்ந்த செவ் வேலை இரண்டு பக்கத்திடத்துங்கொண் டெறிந்தா லொத்ததென்று என் அன்பர்க்குக் கூறி அவர் வரைவு விலக்குவாயாக என்றவாறு.
|
நொதுமலர் - அயலார்: பால் - வெண்மை; பால் - பால்; பால் - இடம்; பால் - பக்கம்; முறையே காண்க. |
(226) |
குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்: |
குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல் என்பது, பெரியோரை வரைவு கூறி வர நமர் எதிர்கோடலைச் செய்யென்று தலைவி பாங்கியொடு கூறல்.
|
| தற்பழி யாமலுஞ் சந்திர வாணன் தமிழ்த்தஞ்சைநங் கற்பழி யாமலுங் காரண மாகக் கயல்விழிநின் சொற்பழி யார்நமர் சொல்லுவல் லேசென்று சொல்லலையேல் இற்பழி யாம்வழி யாநம தாருயீர்க் கேதமுமே.
|
|
(இ-ள்.) கயல்போன்ற விழியினையுடையாய்! சந்திரவாணன் தமிழ்த் தஞ்சையில் தலைவின் றன்னைப் பழியாமலும், நமது கற்பு அழியாமலும், |