|
|
| 1`இன்னா னேது வீங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால வென்மனார்` |
என்னுஞ் சூத்திவிதியால் உணர்க. கொழுந்தின்: ஐந்தாம் உருபு உவமப் பொருளின்கண் வந்தது. பொன்வரை - மகாமேரு. நிகழ் வித்தல் - விளக்குவித்தல். மௌவல் - முல்லை. விரை - மணம். மெய்யுற - உள்ளபடி. |
(230) |
வெறியச்சுறுத்தல்: |
வெறி அச்சுறுத்தல் என்பது, அன்னை வெறியாட்டாளனை, வினாதல் உட்கொண்டாள் என்று தலைவனுக்கு அச்சமுறுத்திக் கூறல்.
|
அம்பல் என்பது பெரும்போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலரென்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமை எனவேற்றுமை சொல்லப்பட்டதாம். |
| மையுற்ற நீலக்கண் மாமங்கை கோன்றஞ்சை வாணன்வெற்பில் நெய்யுற்ற வேலன்ப நீதணி யாமையி னெஞ்சினுள்ளே ஐயுற் றயர்வுற்றெம் மன்னையு மாயுமென் னாரணங்கின் மெய்யுற்ற நோய்தணிப் பான்வெறி யாடல் விரும்பினரே.
|
(இ-ள்.) மையெழுதிய நீலமலர் போன்ற கண்ணையுடைய திருமகட்குக் கணவனாகிய தஞ்சைவாணன் வெற்பில் நெய் தடவிய வேலையுடைய அன்பனே! நீ தலைவிக்குக் கொடுத்த காம வேட்கையாகிய நோயைத் தணியச் செய்யாமையான் அன்னையும் யாயும் எந்நோயோ என்று நெஞ்சினுள்ளே ஐயப்பட்டு அயர்ச்சி யடைந்து, என் ஆரணங்கு போல்வாளது மெய்யுற்ற நோயைத் தணிக்கும் பொருட்டு வெறியாட்டாளனை வினாதல் விரும்பனர் என்றவாறு. |
எனவே, வெறியாட்டாளனை வினாதற்கு முன்னமே நீ விரைந்து வரைந்து கொள்வாய் என்பத குறிப்பால் தோன்றிற்று.
|
மாமங்கை - திருமகள். தணித்தல் - ஆறச்செய்தல். அயர்தல் - கவற்சி. அன்னை - செவிலி. ஆய் - நற்றாய். ஆரணங்கு: ஆகுபெயர் தணிப்பான்: வினையெச்சம். |
(231) |
|
1. தொல். சொல். வேற்றுமையியல் - 13. |