கட
197
வரைவு கடாதல்

 
பிறர் வரைவுணர்த்தல்:
     பிறர்  வரைவு  உணர்த்தல்  என்பது,  பிறர்  வரைவு  கூறி  வந்ததனைத்
தலைவற்கு அறிவித்தல்.

  வெடிக்கின்ற இப்பியுள் நித்திலம் பைத்தலை வெம்பகுவாய்த்
துடிகின்ற திங்களிற் றோன்றுந் துறைவசெஞ் சொற்புலவோர்
வடிக்கின்ற முத்தமிழ் வாணன்தென் மாறையெம் மான்மருங்கை
ஒடிக்கின்ற கொங்கைகண் டாலெவர் நெஞ்சுரு காதவரே.

     (இ-ள்.) வாய்  விள்ளும்  இப்பியிற்  பாதி  உள்ளும் பாதி  வெளியுமாய்த்
தோன்றும  நித்திலம்,  பாம்பினது  வெய்ய  வகிர்ந்த  வாயிடத்துத்   துடிக்கின்ற
திங்களைப்  போலத்  தோன்றும்  நீர்த்துறைவனே,  செவ்விய  சொல்லையுடைய
புலவோர்  ஆராய்ந்து  குற்ற  நீங்கித்  தெளிந்த  முத்தமிழைக்  கற்ற   வாணன்
தென்மாறை  நாட்டிலிருக்கும்  எங்கள்  மான்  போன்ற  தலைவியது  இடையை
ஒடிக்கின்ற கொங்கையைக் கண்டால் நெஞ்சுருகா தார் யார் என்றவாறு.

     வெடித்தல் - வாய்பிள்ளுதல்.    இப்பி - முத்திப்பி.    நித்திலம் - முத்து.
பைத்தலை; ஆகுபெயர்.      பகுவாய் - வகிர்வாய்.     துடித்தல் - நடுங்குதல்;
உவமப்பொருட்குத் துடிப்பு யாது எனின், ஒளியால் துடித்தல்  போலத் தோன்றல்.
வடித்தல் - ஆராய்ந்து  குற்றம்  நீங்கித்  தெளிதல்.  முத்தமிழ் - இயல்   இசை
நாடகம். மான்:  ஆகுபெயர். மருங்கு - இடை. உகுதல் - உதிர்தல். `வெடிக்கின்ற
விப்பியுணித்திலம்  பைத்தலை வெம்பகுவாய்த்  துடிக்கின்ற  திங்களிற்  றோன்றுந்
துறைவ` என்றது இறைச்சியென்க. 1`இறைச்சிதானே பொருட்புறத் ததுவே` என்னுஞ்
சூத்திரத்தா னுணர்க.
(232)    
வரைவெதிர் வுணர்த்தல்:
     வரைவெதிர் வுணர்த்தல் என்பது, பாங்கி தலைவனை  நோக்கி நீ  வரைவு
கூறி, எங்கள் நகர்க்கு வந்தாயாகில் எமர் எதிர் கொண்டு வருவரெனக் கூறுதல்.

  குருதிகண் டாலன்ன காந்தளஞ் சாரற் குறிவெறிதே
வருதிகண் டாய்தஞ்சை வாணன்வெற் பாவெங்கள் மாநகர்நீ
சுருதிகண் டாரொடுந் தோன்றிலெங் கேளிர்நின் சொல்லிகவார்
பருதிகண் டால்மல ராதொழி யாகயப் பங்கயமே.

      (இ-ள்.) தஞ்சைவாணன்  வெற்பனே!  குருதி   கண்டாலொத்த   காந்தட்
பூவலர்ந்த எங்கள் சாரற் குறியிடத்தில் பயனின்றியே வருவாய்; எங்கள்
1. தொல். பொருள். பொருளியல் - 35.