கட
தஞ்சைவாணன் கோவை
198

 
சாரற் குறியிடத்தில் பயனின்றியே வருவாய்;  எங்கள்  மாநகரில் நீ வேதம் வல்ல
அந்தணரொடும்  வந்து  தோன்றி வரைவு கூறினையேல் எங்கள் சுற்றத்தார்  நின்
சொல்லைக் கடவார்; அஃதென்னெனின், ஞாயிற்றைக் கண்டால்  குளத்திலிருக்கும்
தாமரை  அலராது   ஒழியா;   ஆதலால்,   அந்தணரை   முன்னிட்டுக்கொண்டு
வருவாயாக என்றவாறு.

    எனவே, வெளிப்படையால் வரைவு கடாவியது.
    குருதி - இரத்தம். அம்: சாரியை. குறி: ஏழாம்வேற்றுமைத் தொகை. கண்டாய்:
முன்னிலை யசைச்சொல். சுருதி - வேதம். கண்டார் - முடிவுகண்டார்.  இகத்தல் -
கடத்தல். `நின்சொல் இகழார்` என்று பாடமோதுவாரு  முளர்.  `அலராது ஒழியா`
என்பது அலருமென்னும் பொருடந்து நின்றது.
(233)    
வரையுநா ளுணர்த்தல்:
    வரையுநாள் உணர்த்தல் என்பது, மணஞ்செய்கின்ற நாளை அறிவித்தல்.
  அலகம் பனகண் ணிவள்கொங்கை மென்சுணங் காகிவண்டு
பலகம் பலைசெய்யப் பூத்தன வேங்கை பனிவரைமேல்
திலகம் பதித்தெனச் சேல்வைத்த வாணன்தென் மாறைமன்னன்
உலகம் பயில்புகழ் போற்சிலம் பாமதி யூர்கொண்டதே.

    (இ-ள்.) சிலம்பனே! கூர்மை பொருந்திய  அம்பு  போன்ற  கண்ணையுடைய
எங்கள் தலைவியது இறுகி வளர்ந்த
 முலைமேல்  பரந்த மெல்லிய சுணங்குபோல
வண்டுகள்  பலபல   விதமாய்   ஆரவாரஞ்   செய்ய   வேங்கைகள்  
 பூத்தன;
பனிவரைமேல்  திலகம்  பதித்ததுபோன்ற  சேற்கொடியை  வைத்த
 வாணனாகிய
தென்மாறை  மன்னனது  உலகமெல்லாமாக  வளைந்த  புகழ்போல்
  திங்களைப்
பரிவேடம் வளைந்தது என்றவாறு.

    எனவே,  இது  வரையுநாளென  வெளிப்படையான்  உணர்த்திய வாறாயிற்று.

    அலகு - கூர்மை.    அம்பு - கண்.   கணங்கு - மாமைநிறம்.   கம்பலை -
ஆரவாரம்.  பனிவரை - இமயமலை.  சேல் : ஆகுபெயர். பயிலுதல் - வளைதல்.
ஊர் - பரிவேடம்.  `வண்டு கம்பலை  செய்யப்  பூத்தன  வேங்கை; என்றதனால்,
`வேங்கை சண்பகம் வண்டுணா மலர்`  என்னும்  விதியான்,   வேங்கைப்  பூவை
வண்டு   அணுகாதாதலால்  இங்ஙனம்   கூறிய   தென்னையெனின்,   வேங்கை
மரத்தினும், சண்பகமரத்தினும் வண்டுண்ணாதிராது, உண்ணின் அதனான்  மயங்கி
மூர்ச்சையினை  யடையும்,  பூவைக்   கொண்ட   உவகையால்   ஆரவாரிக்கும்,
அதுபற்றிக் கூறியவாறு.
(234)