|
|
அறிவு அறிவுறுத்தல்: |
அறிவு அறிவுறுத்தல் என்பது, பாங்கி தலைமகளறிவு தலைமகற்கு அறிவுறுத்தல். |
| வனநாள் முளரி முகைவென்று வாணன்தென் மாறைவெற்பில் கனநா ணணிந்துபொற் கச்சற வீசிக் கதித்தெழுந்த தனநாணு நுண்ணிடைத் தையனல் லாள்பழி சாற்றுவல்யான் எனநாணி நின்பழி தான்மறைத்தாளன்ப என்னையுமே.
|
(இ-ள்.) அன்பனே! வாணன் தென்மாறை வெற்பில் நீரில் தோன்றி மலர் மலர்தற்கு நாட்கொள்ளும் தாமரை முகையை வென்று, கனமாகிய பொன்னாண் அணிந்து, பொற்கச்சு அற எறிந்து பருத்தெழுந்த முலைக்கு நாணப்பட்ட நுண்ணிய இடையையுடைய தையலாகிய நல்லாள், நீ பிரிந்து செய்த பிழையை யான் சொல்லுவன் என்று நாணி நினது பழியைச் சொல்லாமல் என்னையும் மறைத்தாள் என்றவாறு. |
எனவே இங்ஙனம் அறிவுடையாளை நீ விரைந்து வரைந்து கொள்ளெனக் குறிப்பால் கூறியவாறாயிற்று.
|
வனம் - நீர். நாண்முகை - மலர்தற்கு நாட்கொள்ளும் முகை. நாண் - பொன்னாண்: ஓர் அணிவிசேடம். வீசி - எறிந்து. கதித்தல் - பருத்தல். தனம் - முலை: தனத்துக்கு என நான்கனுருபு தொக்கது. |
(235) |
குறிபெயர்த்திடுதல்: |
குறிபெயர்த்திடுதல் என்பது, பாங்கி இக்குறி இயல்பன்று, வேறொரு குறியிடை வருகவென்று கூறுதல்.
|
| ஊரோர் பவரிங் குலாவவுங் கூடும்வந் தொண் சிலம்பா வேறோர் பொமுபரிற் போய்விளை யாடுக வேற்படையான் மாறோர் பகைவென்ற வாணன்தென் மாறையெம் மன்னுதவப் பேறோர் வடிவுகொண் டாலன்ன நீயுமென் பேதையுமே.
|
(இ-ள்.) ஒள்ளிய சிலம்பை யுடையவனே! உறுதற்றொழிலை ஆராய்ந்து திரிபவர்கள் இக்குறியில் வந்து உலாவவுங் கூடுமாதலால், வேற்படையினாலே எதிர்ந்தோர் பகையை வென்ற வாணன் தென்மாறை நாட்டில் என்னுடைய நிலை பெற்ற தவப்பேறு ஒரு வடிவுகொண்டாலொத்த நீயும் என் பேதையும் வேறாகிய ஒரு சோலையிற்போய் விளையாடுக என்றவாறு.
|
எனவே, இக்குறிக்கண் வாரற்க எனக் குறிப்பால் வரைவு கடாதலாயிற்று. |
ஊறு - உறுதல். ஓர்பவர் - ஆராய்பவர். உம்மை: எதிர்மறை; `வந்திங்கு` என இயையும் பொதும்பர் - சோலை. மாறு - எதிர்; |