|
|
வாளிரண்டு மாறுவைத்தபோல் மழைக்கண் மாதரார்` எனப் பிறரும், `மாறு` எதிராகக் கூறியவாறு உணர்க. |
(236) |
இத்துணையும் பன்னிரண்டாநாட் செய்தியென் றுணர்க. |
பகல்வருவானை இரவுவருகென்றல்: |
| முத்தணி நீல மணித்தகட் டுள்ளெங்கு மொய்கௌவே வைத்தணி சேர வகுத்தது போற்றஞ்சை வாணன்வையைப் பைத்தணி வார்திரை நோய்கருந் தாட்புன்னைப் பாசிலைவெண் தொத்தணி பூந்துறை வாவரு வாயிருள் தூங்கிடையே.
|
(இ-ள்.) முத்தினிரையை நீல நிறமாகிய நல்ல தகட்டன் எங்குஞ் செறிவுகொள வைத்து ஒழுங்குசேர வகுத்ததுபோலத், தஞ்சை வாணனது வைகையாற்றிடத்துப், பைத்த அழகாகிய நெடிய அலை தோயப்பட்ட கரிய அடியையுடைய புன்னையினது பச்சிலையில் வெள்ளிய பூங்கொத்தணியப்பட்ட பொலிவினை யுடைய துறைவனே, இருள் தூங்கப்பட்ட இடையாமத்து வருவாயாக என்றவாறு.
|
முத்தணி - முத்துநிரை. மொய்கொள் - செறிவுகொள். பைத்து - பைத்த. அணி - அழகு. வார் திரை - நெடிய திரை. கருந்தாள் - கரிய நிறத்தையுடைய அடி. பாசிலை - பச்சிலை. தொத்து - பூங்கொத்து. பூ - பொலிவு. இச்செய்யுளில் இறைச்சி கூறியவாறு உணர்க. |
(237) |
இரவு வருவானைப் பகல்வரு கென்றல்: |
| இழைவினை யாடு மிளமுலை சாயற் கிடைந்தமஞ்ஞை கழைவிளை யாடுங் கடிப்புனங் காத்துங் கலையகலா துழைவினை யாடு முயர்சிலம் பாவின்னு முன்பொருட்டால் மழைவிளை யாடு மதிற்றஞ்சை வாணன் மலயத்திலே.
|
(இ-ள்.) புயல் விளையாடும் மதில்சூழ்ந்த தஞ்சைவாணனது பொதிய மலையிடத்து மானைப்பிரியாத கலைவிளையாடும் உயர்ந்த சிலம்பை யுடையவனே! இன்னும் உன் பொருட்டாகப் பூண் விளையாடப்பட்ட இளமுலையை யுடையாளது சாயலுக்கு இடையப்பட்ட மஞ்ஞை மூங்கிலிடத்து விளையாடும் சிறந்த தினைப்புனத்தை யாங்கள் பகற்பொழுதிற் காப்போம், அங்கு வருவாயாக என்றவாறு,
|
இழை - ஆபரணம். சாயல் - இயல். இடைதல்: தோல்வியடைதல். கழை - மூங்கில். கடி - சிறப்பு. `உழையகலாது கலை விளையாடும்` என இயையும். `மானைப் பிரியாது கலைவிளையாடும்` என்றதனால், நீயும் |