201
வரைவு கடாதல்

 
பிற்கூறும்   களவில்  இரவுக்  குறிக்கு உரித்தாகலானும் மற்றைத்தினம்  அட்டமிப்
பக்கமாகலானும் என்று உணர்க.

     என்னும் இறையனார் அகப்பொருட் சூத்திர வுரையா னுணர்க.

பகலினுமிரவினும் பயின்றுவரு கென்றல்:
 குரவுங் கணியும் விரவும்வெற் பாவெய்ய குஞ்சரமேல்
வரவுந் தியதெவ்வை மாற்றிய வாணன்தென் மாறைமின்னும்
அரவும் பணியும் நுடங்கிடை யாற்றல் ளால்பகலும்
இரவுங் குறிவயி னீவரல் வேண்டும் இவள்பொருட்டே.

     (இ-ள்.) குரவமரமும்   வேங்கை  மரமும் ஒன்றோடொன்று  கலந்திருக்கும்
வெற்பை யுடையானே!வெய்ய யானையின்மேல் வரவை நடத்திய பகையை மாற்றிய
வாணன் தென்மாறை நாட்டில் மின்னும் அரவும் பணியப்பட்ட ஒசியும் இடையினை
யுடையாள் உன்னைப் பிரிந்து ஆற்றலள்; ஆதலால், இவள் பொருட்டுப்  பகலினும்
இரவினுங் குறியிடத்தில் நீ வரவேண்டும் என்றவாறு.

     எனவே,  ஓரறிவுயிராகிய    மரங்களும்    பிரியாது     ஒன்றோடொன்று
கலந்திருக்கின்றமையால், ஆறறிவோடு   கூடிய   நீ  பிரிந்திருக்கத் தகாது என்று
உள்ளுறையுவமம் தோன்றியவாறு உணர்க.

     குரவு - கரா.  கணி - வேங்கை.  விரவுதல் - கலத்தல். உந்தல் - நடத்தல்.
நுடங்கல் - ஒசிதல். நுடங்கிடை: அன்மொழித்தொகை.
(239)    
பகலினு மிரவினும் அகலிவ ணென்றல் :
 தாவாத செல்வந் தருந்தஞ்சை வாணன் தடஞ்சிலம்பா
நீவாரல் சார னிலவல ராம்பக னீடிருளார்
மாவா னிலவு நிலமங்கை வார்குழன் மல்லிகைபோல்
ஓவா திரவெறிக் குஞ்சோலை நீழலி னூடுவந்தே.

     (இ-ள்.) தன்னை   யடைந்தோர்க்குக்  கேடில்லாத   செல்வத்தைத்  தரும்
தஞ்சைவாணனது  பெரிய  சிலம்பை  யுடையானே! பகலில் வரின்  விளங்கப்பட்ட
அலராம்; இரவில்  வரின்  நீண்ட  இருளார்ந்த பெரிய வானிலவு,  நிலமங்கையது
குழலின்  முடித்த   மல்லிகைப் பூப்போல, நீங்காது சோலை நிழலினுள்ளே வந்து
எறிக்கும்; ஆதலால், சாரலிடத்து நீ வாரலை என்றவாறு.

     தாவாத - கெடாத.    நிலவுதல் - விளங்குதல்.   மா - பெருமை. வான் -
ஆகாயம். நிலவு - நிலா. ஓவாது - நீங்காது. `பகல் நில வலராம்` எனவும்,