|
|
`இரவுநீடிருளார்` எனவும், `வந்தே யெறிக்கும்` எனவும், `சாரல் நீ வாரல்` எனவும் இயையும். சாரல் என்புழி ஏழனுருபு தொக்கது. |
(240) |
இத்துணையும் பன்னிரண்டாநாட் செய்தியென் றுணர்க.
|
உரவோன் நாடும் ஊரும் குலனும் |
மரபும் புகழும் வாய்மையும் கூறல்: |
| தலத்திற்கு மாறைக்கு மன்னவன் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ் நிலத்திற்கு மாமணி யாகுநின் னாட்டிற்கு நின்பதிக்கும் குலத்திற்கு மாசில் குடிமைக்குஞ் சீர்மைக்குங் கோதின்மெய்ம்மை நலத்திற்கு மாவதன் றால்வரை யாது நடப்பதுவே.
|
(இ-ள்.) புவிக்கும் மாறைக்கும் மன்னனாகிய வாணனது தமிழ்த்தஞ்சை சூழ்ந்த நிலத்திற்கும் மாமணியாகும் நின் நாட்டிற்கும் நின் பதிக்கும் நின் குலத்திற்கும் குற்றமில்லாத நின் குடிமைக்கும் சீர்த்திக்கும் குற்றமில்லாத நினது வாய்மைக்கும் நீ செய்யும் நல்வினைக்கும் நீ வரையாது நடப்பது ஆகும் முறைமை யன்று என்றவாறு.
|
உம்மைகள்: எண்ணின்கண் வந்தன. `தலத்திற்கு மன்னவன்` என்பது அமையாதோ, `மாறைக்கு மன்னவன்` என்னல் வேண்டுமோ எனின், மாறை தலைமுறைக்காணி யாதலாற் கூறினார். சீர்மை - சீர்த்தி. மெய்ம்மை - வாய்மை. நலம் . செய்யப்படும் நல்வினை. ஆல் : அசை. |
(241) |
ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல்: |
ஆறு பார்த்துற்ற அச்சங் கூறல் என்பது, வரும் வழியைக் கருதி அவ்வழியில் திரிதரும் விலங்காற் றோன்றும் அச்சங்கூறல்,
|
| புராந்தகர் செஞ்சடை வெண்பிறை போனுதற் புள்ளிமிழ்பூங் குராந்தொடை மென்குழற் கொம்பினை வேண்டிக் கொடிமுல்லைநீள் மராந்தழு வுந்தஞ்சை வாணன்வெற் பாவல்சி தேர்ந்திலஞ்சிக் கராந்திரி கல்லதர் வாயெல்லி நீவரல் கற்பலவே.
|
(இ-ள்.) முல்லைக் கொடியானது நீண்ட செங்கடப்ப மரத்தைத் தழுவிப்படருந் தஞ்சைவாணன் வெற்பனே! புராந்தகரது செஞ்சடையிற் சூடிய வெண்பிறை போன்ற நுதலையும், வண்டுகள் ஆரவாரிக்கும் பூங்குராமாலை யணிந்த மெல்லிய குழலினையும் உடைய கொம்பு போல்வாளை வேண்டி, நிலத்திற் குழியாய் ஆழ்ந்த நீர்நிலையிடத்து முதலைகள் இரைதேடித் திரியப்பட்ட கல்லதரினிடத்து இராக்காலத்து நீ வருவது முறைமை யன்று என்றவாறு. |