203
வரைவு கடாதல்

 
புராந்தகர் - ஈசர்.   புள் - வண்டு.  இமிழ்தல் - ஆரவாரித்தல். குராந்தொடை -
குருவமாலை. கொம்பு: ஆகுபெயர்.  மராம் - செங்கடம்பு.   `மராந்தழுவும் வெற்பு`
எனக் கூட்டுக. வல்சி - இரை. தேர்ந்து - தேடி. இலஞ்சி - குழிந்தாழ்ந்த நீர்நிலை.
கராம் - முதலை. கல்லதர் -இருமருங்கும் நெருங்கிய வழி. எல்லி - இரவு. கற்பு -
முறைமை.

     ஓரறிவாகிய  கடம்பு  முல்லைக்கொடியைத்  தழுவியதுபோல  ஆறறிவொடுங்
கூடிய   உயர்பிறவியாகிய   நீ   கொடிபோல்வாளைத்   தழுவுவாயாக     என்று
உள்ளுறையுவமங் கொள்ளக்கிடந்தவாறு உணர்க.
(242)    
ஆற்றாத் தன்மையாற்றக் கூறல்:

     ஆற்றாத்  தன்மை யாற்றக் கூறல் என்பது, தலைமகளது ஆற்றாத தன்மையை
ஆற்றுதல் செய்யத் தலைவற்குக் கூறல்.

 கலங்குந் தெளியுங் கனலெழ மூச்செறி யுங்கண்ணிளீர்
மலங்கும் பொலந்தொடி சோரமெய் சோரு மறஞ்செய்கொலை
விலங்கும் படிறுசெய் யாக்குன்ற நாட விரைந்தளிப்பாய்
அலங்குங் கடும்பரித் தேர்வாணன் மாறை யணங்கினையே.

     (இ-ள்.) விளங்கப்பட்ட  கடிய வேகத்தையுடைய பரி பூட்டிய  தேரையுடைய
வாணன்   மாறையின்  மறமாகச்   செய்யுங் கொலைத் தொழிலையுடைய விலங்கும்
களவுசெய்யாத  மலைநாட்டை  யுடையானே!  கலங்கும்;  தெளியும்,  நெருப்பெழப்
பெருமூச்செறியும்,   கண்களில்   நீர்ததும்பும்;   பொன்னாற்   செய்த தொடிகழல
மெய்யிளைக்கும்   என்று   சொல்லப்பட்ட   அணங்கு   போல்வாளை விரைந்து
அளிப்பாயாக என்றவாறு.

     அளியாவிடின்   இறந்துபடும்   என்பது தோன்றியவாறு. இவ்வாறு  கூறவே,
வரைந்துகொள்வாயென்று   குறிப்பாற்   கூறியவாறாயிற்று.   மலங்கல் - ததும்பல்.
சோருதல் - கழலுதல்.   சோருதல் - இளைத்தல்.   மறம் - பாவம்.   கொலை -
கொல்லுந் தொழில். விலங்கும்   என்புழி   உம்மை இழிவு சிறப்பு. படிறு - களவு.
குன்றநாடு - மலைநாடு.     அலங்கல் - விளங்கல்.   பரி - குதிரை.   அணங்கு:
ஆகுபெயர்.   புன்மையறிவாகிய  விலங்கும் களவு செய்யா எனவே  மேலறிவாகிய
நினக்கு   வரையாது   களவிலொழுகத்   தகாதெனக் குறிப்பாற்  கூறியவாறாயிற்று.
(243)