|
|
காவல்மிக வுரைத்தல்: |
காவல்மிக வுரைத்தல் என்பது, குறியிடத்து நீ வருவதற்கும் அவள் வருவதற்கும் இடையூறாகிய காவல் மிக்கென்று கூறுதல், மிகவுரைத்தல் -மிகவாயினது உரைத்தல்.
|
| நஞ்சா ரரவந் திரிதரு கானடு நாளிரவில் அஞ்சாது செங்கை யயில்விளக் காவணங்-கின்பொருட்டால் மஞ்சார் மதிற்றஞ்சை வாணன்வெற் பாவரல் வன்சொலன்னை துஞ்சான் கடுந்துடிக் கைநகர் காவலர் துஞ்சினுமே.
|
(இ-ள்.) முகில்கள் நிறைந்த மதில்சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பில் உள்ளவனே! நஞ்சு பொருந்திய பாம்புகள் திரியப்பட்ட காட்டில் இடையாமத்தில் அச்சமின்றிச் செங்கையிலேந்திய வேலே விளக்காக அணங்குபோல்வாள் காரணமாக வாரற்க; அன்றி, நீ குறியிடத்தில் வருதற்கு இடையீடாகிய கொடுமையை யுடைய துடி கொட்டித் திரியும் நகர்காவலர் துஞ்சார்; அவர் துஞ்சினும், தலைவி குறியிடத்தில் வருதற்கு இடையீடாகிய கடுஞ்சொல்லையுடைய அன்னை துஞ்சாள்; ஆதலால், நீ வரைந்து கொள்வாயாக என்றவாறு. |
எனவே, வெளிப்படையாக வரைவு கூறியவாறு உணர்க. நடுநாள் இரவு - இடையாமம். அயில் - வேல். |
(244) |
காமமிக வுரைத்தல்: |
காமமிக வுரைத்தல் என்பது, தலைவி வேட்கை மிகவாயின துரைத்தல். |
| தென்னாக வண்டமிழ் வாணன்தென் மாறைச் செருந்தியுடன் புன்னாக முங்கமழ் பூந்துறை வாசுரர் போற்றமிர்தம் பின்னாக முன்வந்த பேதைதன் காமப் பெருங்கடற்கு நின்னாக மன்றியுண் டோபுணையாவது நீந்துதற்கே.
|
(இ-ள்.) பொதியமலையிற் பிறந்த வளவிய தமிழைக் கற்ற வாணன் தென்மாறை நாட்டிற் செருந்திப்பூவுடன் புன்னாகப் பூவும் கமழப்பட்ட துறைவனே! சுரர் போற்றப்பட்ட அமுதம் பின்வர முன்னே தோன்றிய எங்கள் தலைவி ஆசையாகிய பெரிய கடலை நீந்துதற்கு மரக்கலமாவது நின் மார்பன்றி வேறுண்டோ என்றவாறு.
|
தென்நாகம் - பொதியமலை. வண்டமிழ் - வளவிய தமிழ். `பூ` என்பதனைச் செருந்தியுடனும், புன்னாகத்துடனும் கூட்டுக. சுரர் - தேவர். பேதை - திருமகள். எனவே, தலைமகளைத் திருமகளாகக் கூறினார்.ஆகம் - மார்பு. புணை - மரக்கலம். செருந்திப்பூவுங் கூடிமணக்குந் |