|
|
துறைவனேயென்று கூறியவதனால், நீங்கள் இருவீரும் மணத்தொடு கூடியிருப்பீரென உள்ளுறையுவமம் தோன்றியவாறுணர்க. |
(245) |
கனவுநலிபுரைத்தல்: |
கனவு நலிபு உரைத்தல் என்பது, தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைப் பாங்கி தலைவற்கு உரைத்தல்.
|
| மாணாத தெவ்வென்ற வாணன்தென் மாறை வளநகர்போல் பூணாக மெல்லியற் வுல்லினை யாகவப் பொய்யைமெய்யாப் பேணா மகிழ்ந்து பெருந்துயி லேற்றவள் பின்னைநின்னைக் காணாள் கலங்கின னாற்கலங் காமனக் காவலனே.
|
(இ-ள்.) கலங்காத மனத்தையுடைய காவலனே! மாட்சிமை யில்லாத பகைவரை வென்ற வாணன் தென்மாறை வளநகரைப் போன்ற பூண்பொருந்திய மார்பையுடைய மெல்லியலைக் கனவினிடைத் தழுவினையாக, அந்தப் பொய்யை மெய்யாக விரும்பி மகிழ்ச்சியை யடைந்து பெரிய துயிலையுற்றவள் துயிலுணர்ந்த பின்பு நின்னைக் காணளாய்க் கலங்கினள் என்றவாறு. |
மாணாத - மாட்சிமையில்லாத. தெவ் - பகை: ஆகுபெயர். பூணாகம் - பூண்பொருந்திய மார்பு. மெல்லியல்: தலைவி. பேணி - விரும்பி. பேணா: செய்யா என்னும் வினையெச்சம். ஆல்: அசை. `பெருந்துயில ஏற்றவள்` என்றதனால் கனவு வருவிக்கப்பட்டது. |
(246) |
கவினழிபுரைத்தல்: |
கவின் அழிபு உரைத்தல் என்பது, தலைவி அழகு அழிந்ததனைத் தலைவற்குக் கூறுதல். |
| ஏரேற்ற கொங்கை யிளங்கொடி மாந்தளி ரேய்ந்தவண்ணம் காரேற்ற கங்குலிற் பீரலர் போன்றது காவியுண்கண் வாரேற்ற பைங்கழல் வாணன்தென் மாறையில் வாவியின்கண் நீரேற்ற செங்கழு நீர்மலர் போன்றது நின்பொருட்டே.
|
(இ-ள்.) தலைவனே! நின்பொருட்டு அழகு நிறைந்த கொங்கையையுடைய இளங்கொடி போன்றவளது மாந்தளிர்க்கு ஒப்பாகிய அழகு கருமைநிறைந்த இராக்காலப் பீர்ப்பம்பூப் போன்றது; கருங் குவளைபோன்ற உண்கண், வார்கோத்துக் கட்டிய பைம்பொன்னாற் செய்த வீரக்கழல் புனைந்த வாணன் தென்மாறை நாட்டிலுள்ள வாவியிடத்துச் செங்கழுநீர் மலரில் நீர் நிறைய முகந்து கொண்ட மலர்போன்றது என்றவாறு. |