209
வரைவு கடாதல்

 
நகரில்  அமரை   வென்ற   வாணன்   தென்மாறையில்   வந்து  வந்து போகத்
திருவுள்ளம் வைத்து உம்முடைய திருநகர்க்குச் செல்லுவீர் என்றவாறு.
     முல்லை  யுரிப்பொருள் - இருத்தல்;    `இல்லத்து உறையும்` என்று கூறியது.
சூழ்தல் - அணிதல்.     சுடர் - கதிரோன்.   புரிசை - மதில்.  வல்லம் - ஓரூர்.
வந்து வந்து என்பது, விரைவின்கண் வந்த அடுக்கு.
(251)    
பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்:
 நிலவேய் தரள நிரைத்தன்ன வாணகை நீலநிறக்
குலவேய் நிகர்பொற் றொடிநெடுந் தோளி குறுகிவரச்
செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழுங்கமலத்
தலவே தியன்பெறு நாள்பெற்று வாழ்பவன் தஞ்சையிலே.

     (இ-ள்.) நிலவுபொருந்திய   முத்தங்களை நிரைத்தாலொத்த  ஒளிபொருந்திய
நகையினையும்,   நீலநிறத்தையுடைய   விசேட   மாகிய   வேய்க்கு    நிகராகிய
பொற்றொடியணிந்த   நெடிய   தோளையும்   உடையாய்1  நம்  அன்பராயினார்
செழுங்கமலத்தை    இடமாகவுடைய   பிரமன்  பெறும்   வாழ்நாளைப்  பெற்று
வாழ்பவனாகிய   செந்தமிழ்   வாணனது   தஞ்சாக்கூரிற்   கடுகிவரச்   செலவே
கருதினர் என்றவாறு.

     நிலவு - ஒளி.     எய்தல் - பொருந்துதல்.            தரளம் - முத்தம்.
வேதியன் - பிரமன். பிரமன்  பெறுநாள் சதுர்யுகம்  ஒரு  வட்டந்திருப்பின்  ஒரு நாள்;அந்த நாட் கணக்கில் ஆண்டு நூறென்று உணர்க.

(252)    
தலைவி நெஞ்சொடு புலத்தல்:
 குளித்தா ரிளங்கொங்கை யாவியி லாவி குளிர்ப்பநம்மை
அளித்தா ரளித்தக லத்தணைத் தாரன் றணங்கின்முன்னே
தெளித்தார் செழுந்தஞ்சை வாணனொன் னாரினஞ் சிந்தைநைய
ஒளித்தா ரவரிங்ங னேநன்று நன்றிவ் வுலகியலே.

     (இ-ள்.) அன்பராயினார்  இளங்கொங்கை   யாகிய   வாவியிற்   குளித்தார்,
விரகக் கனலால்  வெதும்பிய நம் ஆவி குளிர்ச்சியை யடைய  நம்மை யளித்தார், அளித்து,  மார்பிடத்து   அணைத்தார்,  இயற்கைப்புணர்ச்சி    கூடிய    அன்று
அணங்கின்     முன்னே     பிரியேன்     என்று      தெளியச்    செய்தார்.   
செழுமையுடைய  தஞ்சைவாணனுக்கு ஒன்னாரைப்   போல்   நம்முடைய  சிந்தை
நைய வொளித்தார் அவர்; இவ்விடத்து இவ்வுலகியல் நன்று நன்று என்றவாறு.