|
|
தலைவன்மேற் குறையை உலகின்மேல் வைத்துக் கூறினாள், `நன்று நன்று` என்பது குறிப்புமொழி. ஆவி - வாவி. ஆவி - உயிர். தெளித்தல் - தெளியச் சொல்லுதல். ஒன்னார் - பகைவர். இன் : உவமைப் பொருட்கண் வந்தது : புலத்தல் - நொந்து கூறல். |
(253) |
இத்துணையும் பதினான்காம்நாட் செய்தியென் றுணர்க. சென்றோ நீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி: |
சென்றோன் நீடலிற் காமமிக்க கழிபடர் கிளவி என்பது, தலைவன் மாலைக்காலமளவும் வாராது வரவுநீட்டித்தலாற் காமமிகுந்தவதனால் மிகுந்த நினைவொடு கூடிய சொல். |
| மயிலாடு தண்டலை மாறை வரோதயன் வாணனொன்னார்க் கெயிலா கியகடற் கானலஞ் சேர்ப்பற் கிடையிருள்யான் துயிலா நிலையொன்றுஞ் சொல்லாய் துணையுடன் சூழ்திரைத்தேன் பயிலா மலரணை மேற்றுயி லாநிற்றி பாலன்னமே.
|
(இ-ள்.) வெண்மை நிறம் பொருந்திய அன்னமே! மயிலாடப் பட்ட சோலைசூழ்ந்த மாறைநாட்டின் வரோதயனாகிய வாணன் பகைவர்க்கு அரணாயிருக்கப்பட்ட கடற்கழிக் கரையையுடைய சேர்ப்பதற்கு இடையிருளில் யான் துயிலாநிலை யொன்றுஞ் சொல்லாய்; நீயோ துணைபிரியாமல் திரை சூழத்தக்கதாகத் தேன்செறிந்த அம்மலரணை மேல்துயிலாநின்றாய்; இது நினக்குத் தகாது என்றவாறு. |
`துணையுடன் திரைசூழமலரணைமேல் துயிலாநிற்றி` எனவே, தான் அவையின்றி யிருக்கின்றேனென்று கூறியவாறு உணர்க. |
தண்டலை - சோலை. ஒன்னார் - பகைவர். எயில் - அரண். வாணன் ஒன்னாரை நாட்டிலிருக்கவொட்டா னாதலால் அவர் கடலேறிச் செல்வர், அதனால் கடல் அவர்க்கு அரணாயிற்று. கானல் - கழிக்கரை. இடையிருள் - இடையாமம். பயிலுதல் - செறிதல். பாலன்னம் - வெள்ளையன்னம். `சேர்ப்பன்` என்று தலைவனைக் கூறியவதனால் ஐந்திணையிற் கிளவிப் பொருளெத்திணை கூறவேண்டுமோ அத்திணைக்குரிய தலைவனும் தலைவியுமாகக் கூறுதல் இலக்கணமாதலின், இத் தலைவனும் தலைவியுமே கூறப்பட்டு வருவர்; வேறு தலைவனும் தலைவியும் அல்லர் எனக் கொள்க.
|
இவ்வாறு உளம் முதலியவற்றொடு கூறியும் புலம்பியும் அழுதும் பெறும் பயன் யாதோவெனின், மூடிவைத்து வேங்கலத்தை வாய்திறக்கில் |