211
வரைவு கடாதல்

 
ஆவிபோதலால்     உட்புழுக்கஞ்      சிறிது            தணியுமென்றுணர்க.
(254)    
தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல்:

     தலைவியைப்   பாங்கி   ஆற்றுவித்தல்   என்பது,   பாங்கி  தலைவிக்குத்
துயர் ஆறும்படி கூறல்.

 ஆடுகம் வாநம் மகன்றவ ரூரக லாப்புதுநீர்
பாடுகம் வாபொற் பசலைத் தார்திறம் பாங்கினெல்லாம்
தேடுகம் வாதஞ்சை வாணனன் னாட்டன்பர் தேர்வழிநாம்
சூடுகம் வாகவ லாதவர் கானற் றுறைமலரே.

     (இ-ள்.) நம்மை   யகன்ற   அவரூரை   யகலா வெள்ள நீரில் ஆடுகம் வா,
பொற்பசலையை   நமக்குத்  தந்தவரது வெற்றியைப் பாடுகம் வா,  தஞ்சைவாணன்
நன்னாட்டிலுள்ள  அன்பர்  தேர்  சென்ற   வழிப்பக்கமெல்லாங்  கவற்சியில்லாது
தேடுகம்  வா,  அவர்  கானற்றுறைமலரைச்   சூடுகம் வா, அஞ்சலை  என்றவாறு.

     தலைவி:   முன்னிலையெச்சம்.  `அஞ்சலை`  என்பது  வருவிக்கப்  பட்டது.
கானற் றுறை மலர் - கழிக்கரைத் துறைமலர். திறம் - வெற்றி.
(255)    
இத்துணையும் பதினைந்தாம்நாட் செய்தியென் றுணர்க.

தலைவன் வந்தமை பாங்கி யுணர்த்தல் :
 பண்ணும் குழலும் பழுத்தசொற் பாவை பரியலெல்லா
மண்ணும் புகழ்தஞ்சை வாணனொன் னாரென மைக்குவளைக்
கண்ணும் கனையிருட் கங்குலு மாரன் கணைகள்பட்ட
புண்ணும் புலரவந் தாத்தம தூர்வயிற் போனவரே.

     (இ-ள்.)  பண்ணிசையும்    யாழிசையும்     பழித்த      சொல்லையுடைய
பாவைபோல்வோய்,   எல்லா   வுலகும்   புகழ்கின்ற தஞ்சைவாணன் ஒன்னரென
மைக்குவளைபோன்ற  கண்ணில் நீரும், செறிந்த இருளோடு கூடிய இராக்காலமும்,
மாரன்   கணைகள் பட்ட புண்ணும் புலரத் தமது ஊரிடத்துப் போனவர்  வந்தார்,
ஆதலால் நீ வருந்தலை என்றவாறு.

     குழல் - யாழ். பாவை: ஆகுபெயர்.  கண்ணிடத்து நிகழ்பொருளில் தொழில்
இடத்துமேல் நின்றது. புலர - என்பது   இறுதிவிளக்கு. உம்மைகள் எண்ணின்கண்
வந்தன. `போனவர் வந்தார்` என இயையும்.
(256)