|
|
வந்தோன் தன்னொடு நொந்து வினாதல்: |
வந்தோன் தன்னொடு நொந்து வினாதல் என்புழி, நொந்து - துன்பப்பட்டு; வினாதல் - நினைந்து வினாதல். |
(236) |
இத்துணையும் பன்னிரண்டாநாட் செய்தியென் றுணர்க.
|
வந்தோன் தன்னொடு நொந்து வினாதல்: |
| ஒருதலைக் கெய்திய கல்லதர்க் குச்செல்ல வோருயிர்த்தாய் இருதலைப் புள்ளி ளியைந்தநுங் கேண்மையை யெண்ணியெம்மூர் வருதலைக் கொண்க நினைந்திலை வாணன்தென் மாறைவண்டு பொருநதலைக் குங்குழ லாளழ நீகண்டு போயபின்னே.
|
(இ-ள்.) கொண்கனே! நீ கல்பொருந்திய வழியிற் செல்ல வாணன் தென்மாறையில் வண்டு ஒன்றோடொன்று பொருது மாலையை யலைக்குங் குழலாளை அழக்கண்டு போயினபின், ஒருதலையாய்ப் பொருந்திய ஓர் உயிரையுடைத்தாய் இருதலைப்புட்போ லியைந்த உம்முடைய வுறவை யெண்ணி எம் ஊரிடத்து வருதலை நினைந்திலை என்றவாறு. |
`ஒருதலைக் கெய்திய ஓருயிர்த்தாய்` எனவும், `கல்லதர்க்குச் செல்ல வண்டு பொருதலைக்குங் குழலாள்` எனவுங் கூட்டுக. ஒருதலை - நிச்சயம். கல்லதர் - கல்வழி. எய்தல் - பொருந்தல். கேண்மை - உறவு. |
(257) |
தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல்: |
நொந்து வினாதல் - எவ்வண்ணம் ஆற்றியிருந்தீரென்று வினாதல். |
| ஐவா யரவுற்ற தன்னவின் னாவிட ராற்றி யென்போல் எவ்வா றிருந்திர்நீ ரெல்வளை யீரெதிர்ந் தாரைவென்று மைவா ரணங்கொண்ட வாணன்தென் மாறை மருவலர்போல் ஒவ்வா வலரையுங் கேட்டிரு வீரு மொருதனியே. |
(இ-ள்.) ஒளிவளையீர்! எதிரேற்ற பகைவரை வென்று அவரேறி வந்த கரிய யானையை வாங்கிவந்த வாணனது தென்மாறை நாட்டை வந்து சேராதவர் போலப் பொருந்தாத பழிச்சொல்லையுங் கேட்டு இருவீரும் ஒரு தனியே ஐந்தலையரவு தீண்டியதேயொத்த பொல்லாத் துன்பத்தைப் பொறுத்து என்னைப்போல நீர் எவ்வாறிருந்தீர்; இருந்தவகையைச் சொல்லவேண்டும் என்றவாறு.
|
ஐவாயரவு - ஐந்தலைநாகம். இன்னா இடர் - ஐம்புலனால் வரும் பொல்லாத துன்பம். யான் இத்துன்பம் அனுபவித்திருந்தேன் என்பது தோன்ற, `என்போல்` என்றார். எல்வளை - ஒளிவளை. மருவலர் - அடையாதவர். அலர் - பழி. ஒருதனி - ஒப்பற்ற தனி. நொந்து வினாதல் - எவ்வண்ணம் ஆற்றியிருந்தீர் என்று வினாதல். |
(258) |