201
வரைவு கடாதல்

 
தலைவியையாற்றுவித்திருந்த அருமை கூறல்:
 இவளா ருயிர்புரந் தியானிருந் தேன்செக்க ரிந்துவன்ன
பவளா டவியிற் பயினித் திலம்பங் கயங்குவியத்
தவளா தவஞ்சொரி தண்டுறை வாதஞ்சை வாணன்தெவ்வின்
துவளாம லாற்றுவி யென்றன்று நீசொன்ன சொல்நினைந்தே.

செக்கர்வானத்துத்   தோன்றிய   பிறையைப் போலப் பவளக் காட்டில் நெருங்கிய
நித்திலம்  தாமரை  குவிய  வெள்ளைக்  கிரணஞ் சொரியப்பட்ட தண்டுறைவனே!
தஞ்சைவாணன்   பகையைப் போலத் தலைவி மனந் துவளாமல் ஆற்றுவி யென்று
நீ  பிரிந்துபோங்காற்  சொன்ன  சொல்லை  நினைந்து   இவள் அரிய   வுயிரை
நீங்காமல் யான் காத்திருந்தேன் என்றவாறு.

     புரத்தல் - காத்தல்.செக்கர் - செம்மாலை.இந்து - பிறை.  நித்திலம் - முத்து.
தவளாதவம் - வெண்கிரணம்.
      இவற்றுள்,   `தன்பதிக்   ககற்சி  தலைவன்  சாற்ற`லும், `பாங்கி  தலைவக்
கவன்செல  வுணர்த்`தலும்  ஆகிய   இரண்டும்   செலவறி  வுறுத்தற்கு  உரியன.
`தலைமகனைப்   பாங்கி விலக்கல்` ஒன்றும் செலவுடன் படாமைக்குரித்து. `நீங்கல்
வேண்டல்` செலவுடன் படுத்தற்குரித்து. `பாங்கிவிடுத்தல்` செலவுடன் படுதற்குரித்து.
`தலைமகள் நெஞ்சொடு புலத்த`லும், `காமமிக்க கழிபடர்கிளவி` ஆகிய  இரண்டுஞ்
சென்றுழிக்  கலங்கற்குரியன.  `தலைமகளை யாற்றுவித்த`லும் `தலைமகன் வந்தமை
தலைமகட்குணர்த்த`லும் ஆகிய இரண்டும் தேற்றியாற்றுவித்தற்கு உரியன.  `பாங்கி
வந்தோன்    றன்னொடு   நொந்து    வினாதல்`   முதல்   மூன்றும்   வந்துழி 
நொந்துரைத்தற்கு உரியனவெனக் கொள்க.
(259)    
ஒருவழித் தணத்தல் முற்றிற்று.