|
|
பொருள்வயிற்பிரிதல் |
அஃதாவது, வரைவை இடையிலென வைத்து வரைதற்கு வேண்டும் பொருள் காரணமாகப் பிரிதல்.
|
தலைவன் வரைதற்குப் பொருட்காரணமாகப் பரிந்தான் எனின் பொருளிலனாயிற்று. ஆகவே, பொருவிறந்தான் என்பதனோடு மாறுகொள்ளுமெனின், மாறுகாள்ளாது. பழங்கிடையாய்க் கிடக்குஞ் செம்பொருள் பலவுளவேனும அதனை யெடுத்து நுகர்வோன் சிறியனாதலானும். ஆளுவினையுடையன் அல்லனெனப் படுதலானும், இவன் தன் ஊக்கத்தா லீட்டிய பொருளைப் பலவாற்றானும் நுகர்தல் உத்தம விலக்கணமென்று கருதிப் பொருள் வயிற் பிரிந்தர்னென்று உணர்க.
|
| 1`பிரிவறி வுறுத்தல் பிரிவுடன் படாமை பிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல் பிரிவுவழிக் கலங்கல் வன்புறை வன்பொறை வரும்வழிக் கலங்கல் வந்தழி மகிழ்ச்சியென் றொருமையிற் கூறி வொன்பது வகைத்தே வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவே`
|
என்னுஞ் சூத்திர விதியால், வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் ஒன்பது வகைப்படும்.
|
| என் பொருட் புரிவுணர்த் தேந்திழைக் கென்றல்: கழைபோல் வளர்நெற் கவின்பெற வாரி கவர்ந்துவரும் மழைபோல் வருகுவன் வன்சுரம் போய்த் தஞ்சை வாணன்வெற்பில் இழைபோ லிடையாள் முலைவிலைக் காவன யாவையுங்கொண் டுழைபோ லரிநெடுங் கண்மயி லேசென் றுணர்திதுவே.
|
(இ-ள்.) மான்போன்ற செவ்வரி பரந்து நீண்ட கண்ணையுடைய மயில் போன்றவளே, வலிய சரத்திடைப் போய்த் தஞ்சைவாணன் வெற்பிலிருக்கும் நூல்போன்ற இடையாள் முலைவிலைக்கு ஆகவேண்டிய பொருள்களெல்லாங்கொண்டு, கரும்புபோல வளரப்பட்ட நெல் அழகு பெற நீர் கவர்ந்து கொண்டுவரும் முகில்போல், யான் வருவல், நீ தலைவி பக்கற் போய்ப் பிரிவைச் சொல்வாயாக என்றவாறு.
|
எனவே, தலைவி நெற்பயிராகத் தான் முகிலாகவும், பொருள் நீராகவும், அப்பொருளைக் கண்டு தலைவி மகிழ்ச்சியாற் கரும்பு போல் |
|
1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 58. |